the gardener--5
rabindranath tagore.
&
i am restless.
i am athirst for far-away things.
my soul goes out in a longing to touch
the skirt of the dim distance.
o great beyond,
o the keen call of thy flute !
i forget, i ever forget, that i have no wings to fly,
that i am bound in this spot evermore.
i am eager and wakeful,
i am a stranger in a strange land.
thy tongue is known to my heart as its very own.
o far-to-seek,
o the keen call of thy fllute !
i forget, i ever forget, that i know not the way,
that i have not the winged horse.
i am listless,
i am a wandererin my heart.
in the sunny haze of the languid hours ,
what vast vision of thine takes shape
in the blue of the sky!
o farthest end
o the keen call of thy flute !
i forget, i ever forget,
that the gates are shut everywhere in the house
where i dwell alone !
&
தோட்டக்காரன் --5
&
தவிப்பில் நான்
எட்டாப் பொருள்களுக்கு தாகவெறியில்-
மங்கிய தொலைவின் பாவாடை தொட்டிட
ஏங்கித் தவித்து என் ஆன்மா அலைகிறது --
ஓ ! கடந்து நிற்கும் பெரியோனே !
ஓ ! உனது வேய்ங்குழலின் கூரிய அழைப்பே !
நான் மறக்கிறேன் ,
எனக்குப் பறந்திடச் சிறகுகள் இல்லை ;
இம்முளையிலேயே என்றுமே பிணைக்கப்பட்டவன்
என்பதெல்லாம்கூட எப்பொழுதும் மறந்து போகிறேன் .
ஆர்வமுடனும் விழிப்புடனும் இருக்கிறேன்
தெரியாத நிலத்தில் ஓர் புதியவன் நான் -
ஒரு நிகழ இயலா நம்பிக்கையைக் கிசுகிசுத்து
உன்மூச்சு எனை அடைகிறது-
நினது நாக்குத்தான் தனது என
என் இதயம் உணர்கிறது
ஓ ! தேடுதல் கடந்தோனே !
ஓ ! நினது புல்லாங்குழலின் துளைக்கும் அழைப்பே !
நான் மறக்கிறேன் -
வழி அறியேன் ;
பறக்கும் குதிரை உடையோன் அல்லேன்
என்பதையும்கூட என்றுமே மறக்கிறேன் --
கவனமற்றவன்
என் இதயத்துள்ளேயே திரிபவன் நான்
மிளிர்ஒளி மயக்கம் இறங்கிய சோர்வுற்ற வேளையில்
உனது எந்தப் பரந்த ஞானம்
வான்நீலத்தில் வடிவு கொள்கிறது ?
ஓ ! எல்லை இறந்த முடிவே !
ஓ ! ஊடுருவும் உன் குழல் அழைப்பே !
நான் மறக்கிறேன் -
தன்னந்தனியே நான் வசிக்கும் இல்லத்தில்
எங்கும் கதவங்கள் மூடப்பட்டு விட்டன
என்பதையும்கூட நான் மறக்கிறேன்
[ தமிழ் ஆக்கம் ]
-----சந்திர கலாதர்
[ என் கருத்தாய்...]
இந்தப் பிரபஞ்சத்தில் மறைபொருளாம் கடவுளின் அழைப்பு எப்பொழுதும் கூரியதாய்,
,ஊடுருவுவதாய்,நெஞ்சம் கனிவிப்பதாய் என்றும் எங்கும் காணக் கிடக்கின்றன ...
கடவுளின் இந்த அழைப்பைக் கவிதா நெஞ்சங்கள் சரணடைந்திட ,துரத்திப் பிடித்திட ,
ஆலிங்கனம் செய்து கொள்ள ,ஒன்றி ஆடிப் பாடிட வெறிகொண்டு அலைகின்றன ...
இதனைக் கற்பனைக் கர்த்தாக்கள் நன்கு புரிந்து கொள்ள இயலும் ..அவன் தவிப்பை
அவனை அன்றி வேறு யார் புரிந்து கொள்ளளமுடியும் ?
ஆனால், தான் ஓர் புள்ளியில் பூட்டப்பட்டு வெற்றுச் சுழலில் நிற்பதை ,தன் வழிகள் அடைக்கப்பட்டு தற்சிறை ஆனதை ,
பந்த பாசங்களால் சிறகிழந்து பறக்க ....நகரவும் வழியின்றி நாசமாவதை ...
அதே வேளை அந்த இறைவனின் குரல் தன் ஆன்மாவின் குரலேதான் என்ற உண்மைத் தெளிவுற்று
ஜீவாத்மா தன் முழுமைகொண்ட பரமாத்மனைச் சேர ,மாயைகளில் இருந்து விடுபடத்
தவிக்கும் தவிப்பே இதுவோ ?
அழைப்பின் தகிப்போ வலிமை மிகுந்து கொண்டே ,கூர்மை சிறந்து கொண்டே அல்லவா போகிறது ?
த்வைதம் விசிஷ்டாத் த்வைதமாய் அத்வைதம் ஆகத் துடிக்கிறது !
இளமையில் இதுவெல்லாம் எங்கே தெரிகிறது ?
முதுமை அல்லவா தளைகளின் இறுக்கத்தைக் காட்டி,
ஆணவத்தின் அற்பத்தைத் தெளிவாக்கி ,
இறைவனின் குரலை, ஆன்ம சங்கீதத்தைக் காதில் விழ வைக்கிறது !
ஆம்..நாம் காத்திருக்க வேண்டியதுதான் .
நம்மால் ஒன்றும் இயலாது ..
அவன் அருளாலே அவன் தாள் வணங்குவதுபோல் ,
அந்தப் பரமாத்மனே நம் தளை அறுக்க வல்லான் !
அவனை நினைந்து அவன் கீதம் கேட்டபடி
கதவருகே காத்திருப்போம் !

No comments:
Post a Comment