Friday, February 3, 2012

the gardener---78
 
rabindranath tagore
&
it was in may.
the sultry noon seemed endlessly long.
the dry earth gaped with thirst in the heat .
 
 
when i heard from the riverside
a voice calling "come my darling !"
 
i shut my book and opened the window
to look out.
 
i saw a big buffalo with mudstained hide
standing near the river 
with placid , patient eyes;
and a youth, knee-deep in water,
calling it to its bath.
 
i smiled, amused
and felt a touch of sweetness in my heart.  
 
 
&
தோட்டக்காரன்--78
 
&
அது மே மாதம் -
கடுமையான நண்பகல்
முடிவிலா நீட்சியாய்த்  தோற்றுகிறது--
தாகம் தவித்த வறண்ட பூமி 
தகிப்பில் வாய் பிளந்தது .
 
" வா, என் செல்லமே !"என
ஆற்றோரம் ஓர் குரல் கேட்டது .
 
புத்தகம் மூடினேன் -
சாளரம் திறந்து குரலைத் தேடினேன் .
 
கவலையற்ற அமைதியான விழிகளுடன்
சேற்றுக்கரையுடன் ஒரு பெரிய எருமையைப் பார்த்தேன்-
முழங்கால் நீரில் ஒரு வாலிபன்
நீராட அதை அழைப்பதைக் கண்டேன் .
 
முறுவலித்தேன் ;
வியப்பானேன்;
இதயத்தில் ஓர் இனிமையின் வருடல் உணர்ந்தேன் .
 
[ தமிழ் ஆக்கம் ]
 
---சந்திர கலாதர்  

No comments:

Post a Comment