Thursday, February 9, 2012

gitanjali--[ 11 ]
 
rabindranath tagore 
 
&
 
leave this chanting and singing and telling of beads !
whom dost thou worship in this lonely 
dark corner of a temple with doors all shut ?
open thine eyes and see 
thy god is not before thee !
 
 
he is there where the tiller is tilling the hard ground
and where the pathmaker is breaking stones.
he is with them in sun and in shower ,
and his garment is covered with dust.
put off thy holy mantle and even like him
come down on the dusty soil !
 
deliverance ?
where is this deliverance to be found ?
our master himself has joyfully taken upon him
the bonds of creation;
he is bound with us all for ever.
 
come out of thy meditations
and leave aside thy flowers and incense !
what harm is there
if thy clothes become tattered and stained ?
meet him and stand by him in toil
and in sweat of thy brow.
 
&
 
கீதாஞ்சலி --[ 11 ]
 
&
 
' போற்றி 'ப் பொழிவுகள்
பக்தி கீதங்கள் 
மணிமாலை முத்து உருட்டல்கள் -
அனைத்தையும் விலகி நில் -
வாயில்கள் அனைத்தும் பூட்டப்பட்ட
ஒரு வழிபாட்டுத் தலத்தின்
ஒரு தனித்து இருண்ட மூலையில் 
யாரை நீ வழிபடுகிறாய் ?
உன் விழிகள் திற ;
உன் கடவுள் உன் முன்னம் இல்லை காண் !
 
எங்கு உழவர் இறுகிய நிலத்தை பண்படுத்துகிறாரோ
எங்கு சாலையாளர் கற்களைப் பொடிக்கின்றாரோ 
அங்கெல்லாம் அல்லவா  அவன் காணக்கிடக்கிறான்-
வெயிலிலும் மழையிலும் அவர்களுடன் உறைகிறான் -
அவன் ஆடை அடர் புழுதி பூத்தல்லவா இருக்கிறது !
 புனித அங்கிகளைக் களை;
புழுதி மண்ணில் அவனைப்போல் இறங்கி வா !
 
முக்தியா ?
முக்தியை எங்கே காண்பது ?
படைப்பு எனும் தளையை நம் தலைவனே 
மிக மகிழ்வாய் ஏற்றிருப்பது அறியாயோ !
என்றும் நம்முடன் அவன் கட்டுண்டு அல்லவா இருக்கிறான் !
 
தியானங்களில் இருந்து வெளியே வா ;
மலர்கள்,நறும் புகைமேகங்கள்  அகன்று வா !
உனது ஆடைகள் கந்தையாயிடினும்  கறைபடினும் யாது தீங்கு?
உன் புருவம் பூக்கும் வியர்வையிலும் கடும் உழைப்பிலும் 
அவனைச் சந்தித்துத் துணை நிற்பாய் !
 
[தமிழ் ஆக்கம் ]
சந்திர கலாதர்   

No comments:

Post a Comment