Saturday, February 11, 2012

----------The Solitary Reaper-----

தனிமை வயல்-பணிப்பெண்
&

... Behold her, single in the field,
Yon solitary Highland Lass!
Reaping and singing by herself;
Stop here, or gently pass!
Alone she cuts and binds the grain,
And sings a melancholy strain;
O listen! for the Vale profound
Is overflowing with the sound.


அதோ அந்த மேட்டுநிலத்தில்
தனித்து ஒரு வயலில்
கதிர் அறுத்தபடி
தனக்குத்தானே பாடுகின்ற
அந்த எளிய சிறுமியைப் பார் !
இங்கே நில் அல்லது
அரவமின்றிக் கடந்து செல் !
தனியளாய் கதிர் அறுத்துப் பிணைக்கிறாள் ;
சோகம் மேவிய கீதம் பாடுகிறாள்-
ஓ.கேள் ! இத்தாழ்நிலம் முழுதும்
இசைத்திரள் பொங்கி வழிகிறது .


No Nightingale did ever chaunt
More welcome notes to weary bands
Of travellers in some shady haunt,
Among Arabian sands:
A voice so thrilling ne'er was heard
In spring-time from the Cuckoo-bird,
Breaking the silence of the seas
Among the farthest Hebrides.


அரேபியப் பாலைகளின்
இளைப்பாறும் சில குளிர் சோலைசேரும்
களைத்த பயணிகளுக்காய்
எந்த நைட்டிங்கேலும்
இது மிஞ்சிய வருகைக் கீதம்
என்றும் இசைத்ததில்லையே !
மெய்சிலிர்க்கும் இக்குரல்போல்-
நெடுந்தொலைவு ஹெப்ரிடேஸ் நடுவில்
கடல்களின் நிசப்தம் கலைத்து
வசந்தப் பருவத்தின் குயில் ஒன்றும்
கூவிடக் கேட்டதில்லையே ! .


Will no one tell me what she sings?--
Perhaps the plaintive numbers flow
For old, unhappy, far-off things,
And battles long ago:
Or is it some more humble lay,
Familiar matter of to-day?
Some natural sorrow, loss, or pain,
That has been, and may be again?


என்ன பாடுகிறாள் என்று
யாரும் சொல்ல மாட்டீரோ ?
ஒருவேளை சோகம் ததும்பும் பாடல்கள்
நெடும் பழமையின் மகிழ்விலா நிகழ்வுகள்
மற்றும் பண்டைப் போர்கள் சார்ந்தனவோ ?
அன்றி ,இன்றைத் தொடர்புடை
மிக எளிமைக் கவிதைகளோ ?
சற்றே கடந்ததும் நிகழவிருப்பதுமான
சில இயற்கைத் துயரங்கள் ,
இழப்பு ,வேதனைகளோ ?



Whate'er the theme, the Maiden sang
As if her song could have no ending;
I saw her singing at her work,
And o'er the sickle bending;--
I listened, motionless and still;
And, as I mounted up the hill,
The music in my heart I bore,
Long after it was heard no more.

பாடுபொருள் எத்தன்மைத்தோ --
அவள் பாடல் முடிவிலாதது
என்று தோன்றப் பாடினளே.
குறு அரிவாள் மேல் தான் மடிந்து
பணியிடைப் பாடிய இதம் கண்டேன் ...
சிலைஎனச் சமைந்து மௌனியாய்
அவள் பாடல் செவி உண்டேன்;
குன்று உயரே நான் ஏறுகையில்
அப்பாடல் நலிந்து மறைந்து
வெகு நேரம் கடந்தும் கூட
அவளது இசைதனை
நெஞ்சில் சுமந்திருந்தேன்

&

William Wordsworth

[தமிழ் ஆக்கம்] --



-------சந்திர கலாதர்

No comments:

Post a Comment