ருத்ரம் -நமகம்
&
சஷ்ப்யாய ச ப்பேன்யாய ச நம:
சிகத்யாய ச பிரவாஹ்யாய ச
நம இரிண்யாய ச ப்ரபத்யாய ச நம :
கிஹும்சிலாய ச க்ஷ்யனாய ச நம :
கபர்தினே ச புலஸ்தயே ச
நமோ க்ஹோஷ்ட்யாய ச க்ருஹ்யாய ச
நமஸ்தல்ப்யாய ச கேஹ்யாய ச
நம : காத்யாய ச கஹ்வரேஷ்ட்யாய ச
நமோ ஹ்ரதய்யாய ச நிவேஷ்ப்யாய ச
நம : பாஹும்சவ்யாய ச ரஜஸ்யாய ச
நம : சுஷ்க்யாய ச ஹரித்யாய ச
நமோ லோப்யாய சோலப்யாய ச
நம :ஊர்வ்யாய ச சூர்ம்யாய ச
நம : பர்ண்யாய ச பர்ணசத்யாய ச
&
இளம்புல்லில் நதி நுரையில்
மணற்திட்டில் நீரோட்டத்தில்
களர்நில வாசியாய் வழிப்போக்கராய்
சுக்கான் பூமியினராய் நல்லிட வாசியாய்
சடாமுடியினராய் காவலராய்
மாட்டுக்கொட்டடியினராய் இல்லத்தவராய்
கட்டிலில் இருப்போராய் உப்பரிகைவாசியாய்
காட்டுவாசியாய் குகைவாசியாய்
மடுவில் பனித்துளியில் '
தூசியில் புழுதியில்
உலர்கட்டையில் பச்சைக் கட்டையில்
கட்டாந்தரையில் புற்தரையில்
விரிந்த நிலத்தில் ஆற்றில்
பச்சிலைகளில் உலர்ந்த சருகுகளில்
உள்ள [ருத்ரரே ] உம்மை வணங்குகிறேன்
[தமிழில் ]
---சந்திர கலாதர்

No comments:
Post a Comment