geetanjali--[ 13 ]
rabindranath tagore
&
the song that i came to sing
remains unsung to this day.
i have spent my days
in stringing and unstringing my instrument.
the time has not come true,
the words have not been rightly set;
only there is the agony
of wishing in my heart .
the blossom has not been opened;
only the wind is sighing by.
i have not seen his face,
nor have i listened to his voice;
only i have heard his gentle footsteps
from the road before my house.
the livelong day has passed
in spreading his seat on the floor;
but the lamp has not been lit
and i cannot ask him into my house.
i live in the hope of meeting with him;
but this meeting is not yet.
&
கீதாஞ்சலி --[ 13 ]
ரபீந்தரநாத் தாகூர்
&
நான் பாட வந்த பாடல்
இதுநாள்வரை பாடப்படாமலே இருக்கிறது.
என் இசைக் கருவியை முறுக்கேற்றுவதும் தளர்த்துவதிலுமே
நான் நாட்களைக் கடத்தி இருக்கிறேன் .
நேரம் கனியவில்லை
வார்த்தைகள் சரியாகப் பொருத்தப்படவில்லை
இதயத்தில் ஆவலின் வலிமட்டும் வேதனை செய்கிறது.
மொட்டு மலரவில்லை:
காற்றுமட்டும் பெருமூச்செறிகிறது .
அவன் முகம் நான் கண்டிலேன் :
அவன் குரலும் கேட்டதில்லை;
என் வீட்டின் முன்பான சாலையிலிருந்து
அவனது மென்மையான காலடி கேட்டிருக்கிறேன் .
தரையில் அவன் இருக்கை விரிக்கும் செயலிலேயே
நாள் முழுதும் கடந்துபோனது :
ஆனால் தீபம் தூண்டப்படவில்லை :
என் இல்லத்துள் அழைக்க என்னால் முடியாது.
அவனை சந்திக்கும் நம்பிக்கையில் வாழ்கிறேன்:
ஆனால் அதுவோ இன்னமும் நிகழவில்லை.
[ தமிழ் ஆக்கம் ]
----சந்திர கலாதர்

No comments:
Post a Comment