Thursday, February 9, 2012

gitanjali --[ 103 ]
rabindranath tagore
&
in one salutation to thee,my god ,
let all my senses spread out
and touch this world at thy feet .
 
 
like a rain-cloud of july hung low
with its burden of unshed showers 
let all my mind bend down at thy door
in one salutation to thee .
 
let all my songs gather together
their diverse strains into a single current
and flow to a sea of silence
in one salutation to thee .
 
like a flock of homesick cranes
flying night and day back to their mountain nests
let all my life take its voyage to its eternal home
in one salutation to thee.
 
 
&
 
கீதாஞ்சலி --[ 103 ]
&
 
என் இறைவா !
உனக்கான   ஒரு வணக்கத்தில் 
எனது  அனைத்துப் புலன்களும் விரிந்து பரந்து
உன் காலடி இலங்கும் இவ்வுலகைத் தீண்டுவதாகுக !
 
உனக்கான ஒரு வணக்கத்தில்--
கனிந்த  மழைச்  சுமையால்  கனத்து  தாழ்ந்த
ஜூலை மாதத்து  ஓர் மழைமேகம்போல்-- 
உன் வாயிலில்   என் மனம் ஒன்றிப் பணிவதாகுக !
 
உனக்கான  ஓர் வணக்கத்தில்-- 
எனது எல்லாப் பாடல்களும்  
அவற்றின் மாறுபட்ட ராக இழைகளை 
ஒரே ஒரு இசை நதியாக ஒருங்கு நெய்து 
அமைதிப் பெருங்கடல்  பயணிப்பதாகுக !  
 
உனக்கான ஒரு வணக்கத்தில்-- 
இரவு பகலாக இல்லத்தவிப்பில்  
தம் மலைக் கூடுகளுக்கு
இணைந்து திரும்பும் கொக்கினங்கள்போல்--  
என் வாழ்வனைத்தும் தனது அழிவிலா வீடு நோக்கித்
தன்  பயணம் மேற்கொள்வதாகுக !
 
-----தமிழ் ஆக்கம் 
--சந்திர கலாதர்  

No comments:

Post a Comment