Saturday, February 18, 2012

gitanjali--[ 65 ]
rabindranath tagore
&
what divine drink wouldst thou have,
my god,
from this overflowing cup of my life?
my poet,
is it thy delight to see thy creation
through my eyes
and to stand at the portals of my ear silently
to listen to thine own eternal harmony?
thy world is weaving words in my mind
and thy joy is adding music to them .
thou givest thyself to me in love
and then feelest thine own entire sweetness in me.
&
கீதாஞ்சலி --[ 65 ]
ரபீந்திரநாத் தாகூர்   
&
பொங்கி வழியும் என் வாழ்க்கைக் கோப்பையிலிருந்து  
எந்தத்  தெய்வ அமுதம் விழைகிறாய்  ,என் இறைவா? 
என்  விழிவழி உன் படைப்பு கண்டும்
என் செவிமடல் நின்று அமைதியாய்
உனதேயான நிலைபெற்ற ஒருங்குஇசைவு கேட்டும்
ஆனந்திக்கிறாயா ,என் கவிஞனே ?
என் மனதில் வார்த்தைகளை உனது உலகம் 
நெய்து கொண்டிருக்கிறது ;
உனது ஆனந்தம் அவற்றிற்கு இசை கூட்டுகிறது -
அன்பில் உன்னையே நீ  எனக்கு அளிக்கிறாய் ;
பின் உனதேயான முழு இனிமையை 
என்னில் உணர்கிறாய் .
---[ தமிழ் ஆக்கம் ]
----சந்திர கலாதர்      

No comments:

Post a Comment