Friday, January 20, 2012

rabindranath tagore-
gitanjali- [ 95 ]
&
i was not aware of the moment
when i first crossed
the threshold of this life.

what was the power that made me
open out into this vast mystery
like a bud in the forest at midnight.

when in the morning
i looked upon the light
i felt in a moment 
that i was no stranger in this world,
that the inscrutable without name and form
had taken me in its arms 
in the form of my own mother .

even so, in death the same unknown 
will appear as ever known to me.
and because i love this life,
i know i shall love death as well.

the child cries out 
when from the right breast
the mother takes it away,
in the very next moment to find
in the left one its consolation.  
********************************

இவ்வாழ்வின் நுழைவாயிலை
நான் முதன்முதல் கடக்கையில்
அந்த நொடி என் அறிதலில் இல்லை .

ஒரு காட்டில் நள்ளிரவில் ஒரு மலரைப்போல் 
இப்பெருகிப் பரந்த இரகசியத்துள் 
எந்த சக்தி என்னை மலரச் செய்வித்தது !

காலையில் ஒளியை நான் பார்க்கையில் 
இவ்வுலகிற்கு நான் புதியவனே அல்ல -
புரிதல் கடந்த... பெயரும் வடிவமும் அற்றது  
எனது அன்புத் தாயின் வடிவில் 
தன் கரங்களில் ஏந்திக் கொண்டது என்பதை 
ஒரே நொடியில் உணர்ந்து கொண்டேன் .

அதுபோலவே மரணத்திலும் 
அதே அனைத்தும் கடந்தது 
நான் எப்பொழுதும் அறிந்த ஒன்றாய் 
என் முன் தோன்றும் -
நான் இவ்வாழ்வை நேசிக்கிறேன் என்பதால்
மரணத்தையும்  அதுபோல் நேசிப்பேன்
என்று அறிகிறேன் .

தாய் தனது வலது மார்பகத்தில் இருந்து எடுக்கையில் அழும் குழந்தையின் கதறல்
மறு நொடியே இடது மார்பகத்தில்
அமைதி அடைகிறது அல்லவா !
       
-----தமிழ் ஆக்கம்
சந்திர கலாதர்

No comments:

Post a Comment