chitra
rabindranath tagore
&
சித்ரா ---[ மகாபாரத நாடகம் ]
ரவீந்தரநாத் தாகூர்
scene--1
chitra:
art thou the god with the five darts,the lord of love?
காட்சி --[ 1 ]
சித்ரா :
ஐந்து அம்புகள் ஏந்தும் காதலின் தேவன் தாங்கள்தானா ?
madana:
i am he who was the first born in the heart of the creator.
i bind in bonds of pain and bliss the lives of men and women!
[மன்]மதன் :
நான் தான் படைப்புக் கடவுளின் இதயம் தோன்றிய முதல் பிறப்பு .
ஆண் பெண் இருபாலார் வாழ்வினையும் துன்பம் இன்பம் எனும் தளைகளால் பிணைக்கிறேன் .
chitra:
i know, i know what that pain is and those bonds.-
and who art thou, my lord ?
சித்ரா
அறிவேன் ,அந்த வலியையும் தளைகளையும் நான் நன்கறிவேன் -
என் தலைவ, தாங்கள் யாரோ ?
vasantha:
i am his friend--vasantha--the king of the seasons .
death and decrepitude would wearthe world to the bone
but that i follow them and constantly attack them.
i am eternal youth .
வசந்தன்
நான் அவனது நண்பன் --வசந்தன் --பருவங்களின் அரசன்
மரணமும் முதுமையும் உலகைத் தேய்த்து எலும்பாக நலிக்கையில்
நான் அவை தொடர்ந்து அவற்றை விடாது தாக்கி வருபவன் .
நான் அழிவிலா இளைஞன் .
chitra:
i bow to thee, lord vasantha .
சித்ரா
வசந்த தேவனே ,தங்களை பணிகிறேன்
madana:
but what stern vow is thine ,fair stranger ?
why dost thou wither thy fresh youth with penance and mortification ?
such a sacrifice is not fit for the worship of love.
who art thou and what is thy prayer ?
மதன்
அழகிய புதியவளே ..
ஆனால் என்ன இது உனது கொடிய தவம் ?
தவத்திலும் உடல் வருத்தியும் புத்தம் புதிய இளமையை ஏன் சருகாக்குகிறாய் ?
காதல் வழிபாட்டிற்கு இத்தகு தியாகம் ஏற்றதல்லவே .
நீ யார் ? உனது வேண்டுதல் யாது ?
chitra :
i am chitra, the daughter of the kinghly house of manipur .
with god-like grace lord shiva promised to my royal grandsire
an unbroken line of male descent .
nevertheless , the divine word proved powerless to change the spark of life in my mother's womb -
so invincible was my nature ,woman though i be.
சித்ரா
நான் மணிப்பூர் அரச வம்சத்து இளவரசி .
கடவுளர்க்கே உரிய அருட்பெருக்கில் சிவபெருமான் என் மூதாதையர்க்கு முறிவுறாத ஆண் வாரிசுகளை உறுதி அளித்தார் .
இருப்பினும் ,எனது அன்னையின் கருவறையில் சுடர்கொண்ட உயிரின் தன்மையை மாற்ற அது
வீரியமற்றுப் போனது ...
நான் பெண்ணாக இருப்பினும் எனது இயல்பு வெற்றிகொள்ள இயலாதது
madana:
i know, that is why thy father brings thee up as his son . he has taught thee the use of the bow and all the duties of a king.
மதன்
அதனாற்தான் உனது தந்தையார் தனது மகனாக உனை வளர்க்கிறார் என்பதை நான் அறிகிறேன் .
வில் வித்தையையும் அரசக் கடமைகளையும் உனக்குக் கற்றுத் தந்திருக்கிறார்
chitra:
yes, that is why i am dressed in man's attire and have left the
seclusion of a woman's chamber.
i know no feminine wiles for winning hearts.
my hands are strong to bend the bow , but i have never learnt cupid'sarchery, the play of eyes.
சித்ரா
ஆம் ,அதனாற்தான் ஆண் உடை அணிந்து பெண்டிரின் தனியறை வாசம் துறந்து நான் வாழ்கிறேன்
இதயங்களை அடிமைகொள்ளும் பெண்மையின் தேர்ந்த தந்திரங்களை நான் அறியேன் .
எனது கரங்கள் வில்லினை வளைக்கும் வலிமை கொண்டது ;
ஆனால் , காதல் கடவுளின் விற்திறனான ,விழிகளின் விளையாட்டை நான் என்றும் அறியவே இல்லை .
madana:
that requires no schooling,fair one.
the eye does its work untaught, and he knowshow well,who is struck in the heart.
மதன்
அழகிய நங்காய் ,
இதற்கு எந்த பயில்விப்பும் தேவை இல்லை .
கல்லாமலே கண் அதன் மாயம் நிகழ்த்தும் .
எத்தனை வலிமையாக என்பதை இதயம் தாக்குண்டவன் நன்கு அறிவான் .
chitra:
one day in search of game i roved alone to the forest on the bank of the purna river.
tying my horse to a tree trunk i entered a dense thicket on the track of a deer.
i found a narrow sinuous path meandering through the dusk of the entangled boughs, the foliage vibrated with the chirping of crickets,when of a sudden i came upon a man lying on a bed of dried leaves, across my path.
i asked him haughtily to move aside , but he heeded not.
then with the sharp end of my bow i pricked him in contempt.
instantly he leapt up with straight,tall limbs, like a sudden tongue of fire from a heap of ashes.
an amused smile flickered round the corners of his mouth ,perhaps at the sight of my boyish countenance.
then for the first time in my life i felt myself a woman, and knew that a man was before me.
சித்ரா
பூர்ணா நதிக்கரை மீது ஓர் நாள் வேட்டை நாடி தனியளாய் அலைந்து திரிந்தேன் .
அடிமரம் ஒன்றில் என் குதிரையைக் கட்டிவிட்டு ஒரு மானின் தடம் தொடர்ந்து அடர்ந்த
புதர்நிலம் புகுந்தேன் .
பின்னிப்பிணைந்த கிளைகளின் இருள் சுழலில் நெளிந்தோடும் ஒரு வளைபாதை கண்டேன்.
வெட்டுக்கிளிகளின் இரைச்சலில் இலை அடர்வுகள் அதிரக் கண்டேன்.
அப்போது சடாரென எனது வழியில் உலர் சருகுகள் மீது படுத்திருந்த ஒரு மனிதனைக் கண்டேன் .
அகந்தையுடன் ' புறம் நகர் ' என்று சொன்னேன்;
ஆனால் அவனோ அதைக் கண்டுகொள்ளவே இல்லை .
பின் இகழ்ச்சியாக வில்லின் கூர் முனையால் அவனைச் சீண்டினேன் .
அக்கணமே நேரிய நெடிய அங்கங்களுடன்,...சாம்பல் குவியலில் இருந்து துள்ளி எழும் ஒரு தீ நாவைப்போல் ...அவன் குதித்து எழுந்தான் .
அவன் அதரங்களின் மூலைகளில் இருந்து வியந்த புன்முறுவல் கண் சிமிட்டியது ;
ஒருக்கால் அது என் ஆண்பிள்ளைத்தனமான தோற்றத்தால் விளைந்திருக்கலாம்.
பிறகே என் வாழ்வில் முதல் முறையாக என் பெண்மை நான் உணர்ந்தேன்
என் முன் நிற்பது ஓர் ஆண்மகன் என்றும் புரிந்தது.
madana:
at the auspicious hour i teach the man and the woman this supreme lesson to know themselves.
what happened after that?
மதன்
ஒரு புனித வேளையில் ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும்
இந்த உன்னத பாடத்தை அவர்களாகவே அறியச் செய்கிறேன் .
சரி ..பின் நிகழ்ந்தது என்ன ?
chitra:
with fear and wonder i asked him ' who are you ?
' i am arjuna,' he said,' of the great kuru clan'.
i stood petrified like a statue, and forgot to do him obeisance.
was this indeed arjuna, the one great idol of my dreams!
yes, i had long ago heard how he had vowed a twele years ' celibacy.
many a day my young ambition had spurred me on to break my lance with him, to challenge him in disguise to single combat, and to prove my skill in arms against him.
ah,foolish heart, whither fled thy presumption?
could i but exchange my youth with all its aspirations for a clod of earth under his feet,i should deem it a most precious grace.
i know not in what whirlpool of thought i was lost, when suddenly i saw him vanish through the trees.
o foolish woman , neither didst thou greet him ,nor speak a word ,
nor beg forgiveness, but stoodest like a barbarian boor while he contemptuously walked away?...
next morning i laid aside my man's clothing.
i donned bracelets, anklets, waist chain, and a gown of purple red silk.
the unaccustomed dress clung about my shrinking shame;
but i hastened on my quest, and found arjuna i the forest temple of shiva.
சித்ரா
அச்சமும் வியப்பும் மேலிட "நீ யார் ?" என்று கேட்டேன் ;
"நான் அர்ஜுனன் ;மகிமை வாய்ந்த குரு வம்சத்தினன் " என்றார் .
வியப்பால் உறைந்து சிலையான நான் என் மரியாதை புரிதலையும் மறந்தேன் .
என் கனவுகளில் இலங்கிய ஓர் மாவீரன் உண்மையில் இவரேதானா !
ஆம், எப்படி ஒரு பன்னிரண்டு ஆண்டுகள் [ பிரம்மச்சரிய ] தனிமைவாழ்வு நெறியை அவர் மேற்கொண்டிருந்தார் என்பதை வெகுகாலம் முன்பு நான் கேள்விப்பட்டிருந்தேன் .
பல நாட்கள் என் வாலிப வேட்கை அவரை என் மாறுவேடத்திலேயே நேருக்கு நேர் போட்டிக்கு அறைகூவி ,ஈட்டிப் போர் மோதலிட்டு என் ஆயுதப்போர்த் திறமையை அவரெதிர் வெளிக்காட்டிட சீண்டிக் கொண்டிருந்தது .
ஹா ,மூட இதயமே , எங்கோடி ஒளிந்தது உனது அசட்டுத் தைரியம் ?
என்னால் மட்டும் அவரது கைப்பிடி காலடி மண்ணிற்கு எனது இளமையுடன் அதன் அனைத்து ஆர்வங்களையும் பண்டமாற்றிக் கொள்ளக் கூடுமானால் ..
அதனையே எனது ஈடு இணையிலா அருள் எனக் கொள்வேன் அன்றோ !
அந்தோ ,எந்த எண்ணச் சுழலில் நான் என்னை இழந்தேனோ நான் அறியேன் ..
அப்போது திடீரென மரங்களின் ஊடே அவர் மறைவதைக் கண்டேன் .
ஓ..முட்டாள் பெண்ணே ! நீ அவரை வரவேற்கவோ ,வாய்மொழியவோ ,மன்னிப்புக் கேட்கவோ
எதுவுமே செய்யாது ,காட்டுமிராண்டிபோல் நின்றனை ;அதுபோழ்து அவர் இகழ்ச்சியாய் வெளியேகினார் ...
மறுநாட்காலை என் ஆணுடை களைந்து ,செவ்வண்ணப் பென்ணங்கி அணிந்து ,கை கால்,இடை இங்கெல்லாம் பொன்னகை தரித்தேன் .
வெட்கிக் குறுகும் என் மேனியில் பழக்கமில்லா இவ்வாடை இறுக்கிப் பிடித்திருந்தது .
ஆனால் என் தேடுதலில் குறியாய் விரைந்து கானகத்தின் சிவபெருமான் கோயிலில் அர்ஜுனனைக் கண்டேன்.
madana:
tell me the story to the end.
i am the heart-born god, and i understand the mystery of these impulses.
மதன்
இறுதிவரை உன் கதையைச் சொல் ..நான் இதயம் தோன்றிய தேவன் .
எனக்கு இத்துடிப்புகளின் ரகசியங்கள் புரியும் .
chitra:
only vaguely can i remember what things i said, and what answer i got .
do not ask me to tell you all.
shame fell on me like a thunderbolt, yet could not break me to pieces, so utterly hard, so like a man am i .
his last words as i walked home pricked my ears like red-hot needles.
' i have taken the vow of celibacy.
i am not fit to be thy husband!'
oh, the vow of a man!
surely thou knowest, thou god of love, that unnumbered saints and sages have surrendered the merits of their life-long penance at the feet of a woman .
i broke my bow in two and burnt my arrows in the fire.
i hated my strong,lithe arm, scored by drawing the bow-string .
o love, god love, thou hast laid low in the dust the vain pride of my manlike strength;
and all my man's training lies crushed under thy feet.
now teach me thy lessons;
give me the power of the weak and the weapon of the unarmed hand.
சித்ரா
நான் என்ன கூறினேன் என்ன விடை பெற்றேன் என்பனவெல்லாம் தெளிவே இல்லாதுதான் என் நினைவில் உள்ளது .
அனைத்தையும் கூறும்படி என்னை வற்புறுத்தாதீர்கள் .
பேரிடியாய் என் மீது நாணம் வீழ்ந்திடினும் அது என்னைப் பொடிப்பொடியாக்கவில்லை ...
ஏனெனில் ஒரு ஆணைப்போல் அத்தனை கடும் இறுக்கமாய் இருந்திருக்கிறேன் .
நான் இல்லம் திரும்புகையில் அவரது கடைசி வார்த்தைகள் செம்பிழம்பான ஊசிகள்போல்
என் செவிகளில் தைத்தன .
" நான் தனிமைவாழ்வு உறுதி ஏற்றிருக்கிறேன் ..
எனக்கு உன் கணவனாகும் தகுதி இல்லை !"
ஓ ! ஒரு ஆணின் சபதம் !
காதல் தேவனே ...எண்ணிலா ரிஷிகளும் தவசீலர்களும்
ஒரு பெண்ணின் காலடியில் தங்கள் வாழ்நாள் முழுமைத் தவத்தின் பலன்களை எல்லாம்
கப்பம் கட்டியுள்ளனர் என்று நீ அறியமாட்டாயோ !.
என் வில்லினை இரண்டாக உடைத்தேன் ;
என் அம்புகளை தீயிட்டுக் கொளுத்தினேன் .
வில்லின் நாணினை இழுத்து இழுத்து வலிமையும் குழைவும் ஒருசேரப்பெற்ற
எனது கரங்களை வெறுத்தேன்.
ஓ..காதலே..காதல் தேவனே எனது ஆண்நிகர் வலிமையின் வெற்று அகந்தையை மண்ணில் வீழ்த்தினாய் .
உனது காலடியில் மிதிபட்டு எனது எல்லா ஆண்மைப் பயிற்சிகளும் பொடிந்து போயின .
இப்போது உனது பாடங்களைச் சொல்லித்தா. .
வலிவு குன்றியோரின் வலிமையையும் ,
ஆயுதம் ஏந்தாத கரங்களின் ஆயுதத்தையும் எனக்குத் தா .
madana:
i will be thy friend.
i will bring the world-conquering arjuna a captive before thee, to accept his rebellion's sentence at thy hand.
மதன்
நான் உனது நண்பனே .
உலகை வெற்றிகொள்ளும் அர்ஜுனனை ஒரு கைதியாக்கி உன் முன் நிறுத்தி ,அவரது அடிபணியாமைக்கான தண்டனையை உன் கரங்களில் பெறவைப்பேன்.
chitra:
had i but the time needed, i could win his heart by slow degrees, and ask no help of the gods.
i would stand by his side as a comrade, drive the fierce horses of his war-chariot, attend him in the pleasures of the chase, keep guard at night at the entrance of his tent, and help him in all the great duties of a kshatriya, rescuing the weak, and meting out justice where it is due.
surely at last the day would have come for him to look at me and wonder, ' what boy is this? has one of my slaves in a former life followed me like my good deeds into this?'
i am not the woman who nourishes her despair in lonely silence, feeding it with nightly tears and covering it with the daily patient smile, a widow from her birth.the flower of my desire shall never drop into the dust before it has ripened to fruit.
but it is the labour of a life-time to make one's true self known and honoured.
therefore i have come to thy door, thou world-vanquishing love, and thou, vasantha, youthful lord of the seasons, take from my young body this primal injustice, an unattractive plainness.
for a single day make me superbly beautiful, even as beautiful as was the the sudden blooming of love in my heart.
give me but one brief day of perfect beauty, and i will answer for the days that follow.
சித்ரா
எனக்கு மட்டும் நேரம் இருந்திருப்பின் ,சிறுசிறு முயற்சிகளில்
அவருடைய இதயம் வென்றிருப்பேன் ;
தெய்வங்களின் துணை நாடி இருக்க மாட்டேன் .
தோழனாய் அவர் அருகே நின்று ,அவரது போர் ரதங்களின் ஆவேசக் குதிரைகளை ஓட்டி ,
வேட்டையின் மகிழ்ச்சிகளில் துணை நின்று ,,இரவில் அவரது முகாம்களில் காவல் செய்து,எளியோரைக் காத்து, தேவை தேர்ந்து நியாயம் வழங்குதல் ஆகிய பெரும் க்ஷத்ரியப் பணிகளில் எல்லாம் உதவிக்கரமாகி இருந்திருப்பேன் .
இறுதியில் உறுதியாக அந்த நாளும் வரும் ..
அப்போது அவர் வியப்பில் எனை நோக்கி " யார் இந்தப் பையன் ?
நற்செயல்கள் தொடர்வதுபோல் ,என் முந்தையப் பிறவியில் என் அடிமைகளில் ஒருவன் இப்பிறவியில் தொடர்கிறானோ?"
தனிமையின் அமைதியில் ,தன் இரவுக் கண்ணீர் ஊட்டி ,தன் பொறுமைப் புன்முறுவலால்
தினமும் அதைப் போர்த்து ,பிறப்பிலிருந்தே கைம்பெண் நிலை போல் ,தன் இயலாமைத் துயரைப் பேணி வளர்க்கும் பெண் அல்ல நான் .
என் ஆசைமலர் , கனிவதற்கு முன் புழுதியில் என்றும் புகாது .
ஆனால் ஒரு முழுவாழ்வின் உழைப்பிலேதான் ஒருவரின் உண்மைத் தன்மை வெளிப்படவும் மதிக்கப்படவும் கூடும்
எனவே உலகை வெற்றிகொள்ளும் காதலே .!.பருவங்களின் இளமை வசந்த தேவனே !
நான் உங்கள் வாயிலை நாடி வந்துள்ளேன் .
எனது இளமை உடலில் இருந்து
இந்த அடிப்படை அநீதியான,கவர்ச்சியற்ற வெறுமை அகற்றுங்கள் .
என் இதயம் மலர்ந்திருக்கும் திடீர்க் காதலின் அழகிற்கு இணையாக
ஒரே ஒரு நாள் மட்டும் அதிஉன்னத அழகுப் பதுமையாய் மாற்றுங்கள்.
நிறை அழகை ஒரு குறுகிய நாட்பொழுது மட்டுமே வரமாக்குங்கள் .
அதன்வழி தொடரும் நாட்களுக்கு நான் பதில் தருவேன் .
madana:
lady, i grant thy prayer.
மதன்
மங்கையே ,பெருக உன் வேண்டுதல் இதோ
vasantha:
not for the short span of a day, but for one whole year the charm of spring blossoms shall nestle round thy limbs.
வசந்தன்
ஒரு குறுகிய நாள் இடைவெளி மட்டுமல்ல ,ஓராண்டு முழுமைக்குமே வசந்த மலர்களின் கவர்ச்சி உனது அங்கங்கள் எங்கும் சுற்றிப் படர்வதாகுக .
[தமிழ் ஆக்கம் ]
ரபிந்த்ரநாத் தாகூர் / [ ஓவியம் ] வசந்த ரூபன்
சந்திர கலாதர் [தமிழ் ஆக்கம் ]