Let the strains of jubilant song
play on my flute of pain,
and the loosed bark
sway in the sea of tears.
the driving wind has risen,oh risen,
and the whole night through
no sleep has come
to the wild laughter of the waters
dances my heart;
o friend unknown,play out a tune
on my flute of pain.
o thou Unknown,
play strange,new melodies
on my flute of pain,
and let my bark drift
in the rising wind.
in my heart rings the call from him
whom i have never known;
so wonderfully am i caled,
how can i stay at home?
the hope for a home has gone,
and in the blue abundane i have plunged.
you madcap,
play out strange melody,
on my flute of pain.
--rabindranath tagore
***
உற்சாகப் பாடலின் ராக ஜ்வலிப்புகள்
என் வேதனை வேய்ங்குழலில் இசைக்கட்டும் ;
உரிந்த பட்டை கண்ணீர்க் கடலில் அலையட்டும் .
துரத்தும் காற்று வீறு கொண்டு எழுகிறது .
இரவு முற்றிலும் தூக்கம் துளிர்க்கவில்லை ;
நீர்ப் பெருக்கின் முரட்டுச் சிரிப்பிற்கு
என் இதயம் நடமிடுகிறது;
ஓ.. அறிந்திராத நண்பனே,
எனது வேதனை வேய்ங் குழலில்
புதிய வினோத ராகங்களை இசைத்திடு .
என் கழன்ற பட்டை
உயரும் வலிய காற்றில் அலையட்டும் .
நான் அறிந்திராத அவன் அழைப்புகள்
என் இதயம் எங்கும் ரீங்கரிக்கிறது ;
அவனது அழைப்புகள் வெகு அற்புதமானவை ;
நான் எங்ஙனம் வீட்டில் அடைபட முடியும் ?
'சொந்த வீடு' நம்பிக்கை தொலைந்தது ,
நீலப் பெருக்கில் நான் அமிழ்கிறேன்
வெறி கொண்டவனே !
என் வேதனை வேய்ங் குழலில்
வியத்தகு இன்னிசை இசைப்பாயாக !
**
தமிழாக்கம் ---சந்திர கலாதர்
No comments:
Post a Comment