helmsman,launch me..
***
helmsman,launch me
on the ocean of peace--
companion of my life,
give me refuge;
a light shines at the ocean-end,
it is the pole star!
saviour of my life,
grant me the food of grace and
forgiveness
as i journey forth.
may flesh-fetters break,
may more-than-flesh embrace me,
may i now know the 'great unknown'!
**
--rabindranath tagore
****
கலம் இயக்கியே !
நிம்மதிப் பெருங்கடலுள் எனைச் செலுத்து -
வாழ்வின் துணையே !
அடைக்கலம் அருள்வாய்;
மாக்கடல் எல்லையில் ஓர் சுடர் ஒளிர்கிறது-
அதுவே 'துருவ' தாரகை.
என்னுயிர்க் காவலே !
நான் பயணிக்கையில்
அருளையும் மன்னிப்பையும்
உணவாகத் தருவாய்-
என் உடற்கட்டுகள் சிதைவதாகுக;
உடலினும் உயர்ந்தது
எனைத் தழுவுவதாகுக;
இப்பொழுது நான்
அந்தப் பரம்பொருளைஅறிவதாகுக !
*****
தமிழாக்கம் -சந்திர கலாதர்
No comments:
Post a Comment