FLAMING SUN
***
Flaming sun on this fierce afternoon--
i look at the empty chair,
no peace
in that hollow-breasted chair
breathing despair,
breathing emptiness and loss profound
beyond speaking,beyond meaning,
like the eyes of a dog that has lost its master,
lost in bewildering sorrow ,
what happened ? why ?
searching day and night in vain..
the chair speaks with greater sadness,
the voiceless emptiness of this chair
in the room bereft of the beloved one.
**
rabindranath tagore.
*****
சுட்டெரி சூரியன்
***
கடுமையான பிற்பகல்
சுட்டெரிக்கும் சூரியன் -
வெறுமையான இந்த நாற்காலியைப் பார்க்கிறேன் --
அதனில் அமைதி இல்லை ;
உட்கூடற்ற இந்த நாற்காலியில்
நிம்மதி காண்கிலேன் -
நம்பிக்கையின்மைப் பெருமூச்சோடு
சொல் கடந்த ,பொருளும் விஞ்சிய
வெறுமையைப் பேரிழப்பை
உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது --
தன் தலைவனை இழந்து
நடுக்குறும் துயரினில் அமிழ்ந்திருக்கும்
ஒரு நாயின் விழிகளைப்போல் இது தோன்றுகிறது -
என்ன நிகழ்ந்தது ? ஏன் ?
இரவு பகலாய் வீணாகும் தேடுதலில் ...
தன் நேசமுள்ளவன் இல்லா அறைதனில்
இந்நாற்காலியின் குரல் இழந்த வெறுமை
பெருந்துயர் கொண்டு பேசுகிறது .
******
தமிழாக்கம் --சந்திர கலாதர்
No comments:
Post a Comment