MY songs are like waterplants
they do not stay immovable
where they were born.
they have no roots,
only flowers and leaves.
with the joy of light
they dance in the waves.
having neither home nor wealth ,
they are like unknown guests,
no one knows
when they come or go.
when the july rains come
pouring down from the clouds
and submerge the banks,
my waterplants
turbulent and restless,
lose their way in the flood,
and are carried away in all directions
from country to far country.
--rabindranath tagore
[from flight of swans]
&
என் பாடல்கள் நீர்த் தாவரங்களைப்போல் --
தோன்றிய இடத்தில் நிலை கொள்வதில்லை ;
வேர்களற்று மலர்,இலைகள் என்றானவை ;
ஒளியின் ஆனந்தம் தாங்கி
அலைகளில் நடமிடுவன ;
இல்லமோ செல்வமோ இல்லாத
அறிமுகம் அற்ற விருந்தினர்போல்,
அவற்றின் புறப்பிடமோ செல்லிடமோ
எவர்க்குமே தெரியாது .
கார்மேகங்களில் இருந்து
கனத்து இறங்கிக்
கரைகளை அமிழ்த்தி விரையும்
ஜூலை மாத மழைப் பெருக்கில்
எனது நீர்த் தாவரங்கள்
பரபரத்து நிம்மதியற்று வெள்ளத்தில்
தம் வழி தடுமாறுகின்றன ;
நாடு விட்டு வேறோர் தொலை நாட்டிற்கு
எல்லாத் திசைகளிலும்
இழுத்துச் செல்லப்படுகின்றன.
&
தமிழாக்கம் --சந்திர கலாதர்
[நீர்ப்பறவைகளின் பயணம் ]
No comments:
Post a Comment