Monday, January 2, 2012

நூறு ஆண்டுகள் கடந்து என் கவிதைகளில் மகிழும் வாசகனே -

நீ  யார் ?

உனக்கு என்னால் இந்த வசந்த வளத்தில் இருந்து ஒரே ஒரு மலரைக் கூட --

அதோ அந்த மேகங்களின் பொன்னிழை ஒன்றைக் கூட அனுப்ப இயலாது .

உன் கதவுகளைத் திறந்து பார் ;

நான் அகன்ற வெளியைப் பார்க்கிறேன் ;

உன் பூத்துச் சொரியும் மலர்த் தோட்டத்தில் ஒரு நூறாண்டுக்கு முன்

மறைந்த மலர்களின்   நறுமணப் பதிவுகளை ஒன்று சேர் -

உன் இதயத்தின் மகிழ்வில்--  ஒரு வசந்தக் காலையில்  ஒரு உயிர்ப்பான

ஆனந்தம் பாடி ,அதன் உற்சாகமான குரலை ஓர் நூறாண்டின் குறுக்கே  

அனுப்பியதன் உணர்வைப் புரிந்து கொள்வாய் !


---ரபீந்தரநாத் தாகூர்

[தோட்டக்காரன் --85]

[ மொழிமாற்றம் --சந்திர கலாதர் ]


          the gardener--85'

who are you, reader, reading my poems an hundred years hence ?

i cannot send you one single flower from this wealth of the spring ,

one single streak of gold from yonder clouds .

open your doors and i look abroad .

from your blossoming garden gather fragrant  memories of the

vanished flowers of an hundred years before.

in the joy of your heart may you feel the living joy that sang one

spring morning , sending its glad voice across an hundred years.

---rabindranath tagore.  

No comments:

Post a Comment