Monday, January 2, 2012

  மரணமே !என் மரணமே !
ஏன் செவிகளில் இத்தனை பலவீனமாய்க் கிசுகிசுகிறாய் ?

மாலையில் மலர்கள் வாடித் தளர்கையில் -
கால்நடைகள் மந்தையில் இருந்து தொழுவம்  திரும்புகையில்-
கள்ளநடையில் எனை அணுகி நான் புரிய இயலா வார்த்தைகள் பேசுகிறாய் ?

மயக்கும் போதை முணுமுணுப்பாலும் சில்லிட்ட முத்தங்களாலும் இப்படித்தான் எனை நயந்து   வெற்றி கொள்வதோ ,ஓ மரணமே, என் மரணமே?


நம் திருமணத்திற்கு  பெருமைசேர் சடங்குகள் எதுவும்  இல்லையோ ?

ஒரு மாலைகொண்டு காவிச் சுருளான உன் முடிதனை முடிய மாட்டாயோ ?

உன் கொடிதனை முன்னேந்திச் செல்ல எவரும் இல்லையோ ?

உனது சிவந்த தீப் பந்தங்கள் இரவினை நெருப்பாக்கிடாதோ, ஓ மரணமே ,என் மரணமே ?         


உனது சங்க முழக்கங்களுடன் உறங்காத இரவினில் வா -

எனக்குச்  செவ்வாடை உடுத்தி  கரங்களைப் பிடித்து அழைத்துச் செல் .

பொறுமை இன்றிக் கனைக்கும் குதிரைகள் பூட்டிய உனது  தேர் என் வாயிலில் தயாராகக் காத்திருக்கட்டும் .

முகத்திரை விலக்கி கர்வத்துடன் என் முகம் பார் ,ஓ மரணமே ,என் மரணமே !


---ரபீந்தரநாத் தாகூர்
[ தோட்டக்காரன் --81 ]
மொழிமாற்றம் --சந்திர கலாதர்
&
   the gardener -81

why do you whisper so faintly in my ears ,o death ,my death ?

when the flowers droop in the evening and cattle come back to their stalls , you stealthily come to my side and speak words that i do not understand .

is this how you must woo and win me with the opiate of drowsy murmur and cold kisses, o death , my death ?


will there be no proud ceremony for our wedding ?

will you not tie up with a wreath your tawny coiled locks ?

is there none to carry your banner before you, and will not the night be on fire with your red torch-lights, o death , my death ? 


come with your conch-shells sounding ,come in the sleepless night .

dress me with a crimson mantle, grasp my hand and take me.

let  your chariot be ready at my door with your horses neighing impatiently.

raise my veil and look at my face proudly , o death , my death !

---rabindranath tagore.   

No comments:

Post a Comment