Thursday, January 19, 2012

the gardener-[ 9 ]
rabindranath tagore
&
when i go alone at night to my love-tryst,
birds do not sing ,
the wind does not stir,
the houses on both sides of the street
stand silent.
it is my own anklets that grow loud
at every step
and i am ashamed.
when i sit on my balcony
and listen for his footsteps,
leaves do not rustle on the trees,
and the water is still in the river
like the sword on the knees of a sentry 
fallen asleep.
it is my own heart that beats wildly-
i do not know how to quiet it.
when my love comes and sits by my side,
when my body trembles
and my eyelids droop,
the night darkens,
the wind blows out the lamp,
and the clouds draw veils over the stars .
it is the jewel at my own breast
that shines and gives light.
i do not know how to hide it.
---rabindranath tagore
தமிழ் ஆக்கம் 
சந்திர கலாதர் 
&
தனியே இரவில் காதல் சந்திப்பிற்கு
நான்  செல்கையில் 
பறவைகள் பாடுவதில்லை 
காற்று அசைவதில்லை 
இருமருங்கு வீடுகளும் தெருவில் 
மௌனிக்கின்றன-
எனது கொலுசுகளே 
ஒவ்வொரு அடி எடுப்பிற்கும் 
உரத்து  சப்திக்கின்றன-
நான் வெட்கி  போகிறேன் !
மாடத்தில் அமர்ந்து   
அவனது காலடி கூர்கையில் 
மரங்களில் இலைகள் சலசலக்கவில்லை 
உறங்கிப்போன  காவல் பணியாளின் 
முழங்கால் ஓய்வுறும் ஒரு வாள்போல 
ஆற்றில்  நீர் அசைவற்று நிற்கிறது .
காட்டுத்தனமாய் எனது இதயமே 
அடித்துக் கொள்கிறது -
எப்படி அமைதிப் படுத்துவது 
என்பதோ எனக்குத் தெரிவதில்லை .
என் அன்பன் நெருங்கி 
என் அருகே அமர்கையில்-
எனது மேனி அதிர்வுற்று 
என் இமைகள் தாழ்கையில் -
இரவு கறுக்கிறது
காற்று தீபம் அணைக்கிறது 
மேகங்கள் விண்மீன்களைத்
திரை இடுகின்றன .
என் மார்பகத்து இரத்தினமே 
ஒளிர்ந்து விளக்கம் தருகின்றது- 
அதனை எப்படி ஒளிப்பது
என்பது  நான் அறிகிலேன் .       

No comments:

Post a Comment