chitra --ரபிந்த்ரநாத் தாகூர்
சித்ரா
scene 5
களம்-5
&
vasanta --
i cannot keep pace with thee , my friend !
i am tired .
it is a hard task to keep alive the fire you hast kindled .
sleep overtakes me , the fan drops from my hand , and cold ashes cover the glow of the fire .
i start up again from my slumber and with all my might rescue the weary flame .
but this can go on no longer.
வசந்தம் --
நண்பனே ,உன் வேகத்திற்கு நான் ஈடாக முடியவில்லை !
நான் களைத்திருக்கிறேன் .
நீ தூண்டிய தழலை அணையாது காப்பது கடினமான செயலா கிறது .
தூக்கம் எனை மிஞ்சுகிறது ;
கைவிசிறி நழுவுகிறது.
கனல்மீது குளிர் சாம்பல் பரவுகிறது.
திடுக்கிட்டு இமை விழித்து சக்தி எல்லாம் தி ரட்டி களைத்த ஜ்வாலையை மீட்கிறேன் .
எனினும் இது தொடர இயலாது.
madana --
i know , thou art as fickle as a child .
ever restless is thy play in heaven and on earth .
things that thou for days buildest up with endless detail thou dost shatter in a moment without regret .
but this work of ours is nearly finished .
pleasure-winged days fly fast , and the year , almost at its end , swoons in rapturous bliss .
மதனன் -
நீ குழந்தைபோல் உறுதியிலா மனம் படைத்தவன் என்று அறிவேன்..
இம் மண்ணிலும் விண்ணிலும் உனது லீலைகள் எப்போதும் ஓய்விலா தவை ..
எண்ணிலா நுணுக்கங்கள் கொண்டு நாட்கள் பல நீ படைப்பதை
ஒரு நொடியில் சிறு வருத்தமும் இன்றி த் தகர்த்து விடுகிறாய்..
ஆனால் நமது இப்போதையப் பணி ஏறத்தாழ மு டிந்து விட்டது .
இன்பச் சிறகுகள் பெற்ற நாட்கள் விரைவா கப் பறக்கின்றன ..
ஆண்டு,அதன் கடைசி நிலையில் உன் னதப் பேரானந்தத்தில் கிறங்குகிறது .
---தமிழாக்கம்
சந்திர கலாதர்
28.11.2012 / புதன் / கார்த்திகை 13
பகல் 11.45



No comments:
Post a Comment