chitra 4
சித்ரா - 4
&
scene 4
களம் -4
&
chitra --
why do you watch me like that, my warrior ?
சித்ரா --
மாவீரனே ! ஏன் அப்படி என்னைப் பார்க்கிறீர்கள் ?
arjuna--
i watch how you weave that garland. skill and grace , the twin brother and sister , are dancing playfully on your finger-tips
i am watching and thinking .
அர்ஜுனா --
நீ மாலை தொடுப்பதை கவனிக்கிறேன்
இரட்டைச் சகோதர சகோதரிகளான திறமை-- நளினம் ஆகியவை உன் விரல் விளிம்புகளில் களி நடம் புரிகின்றன;
நான் அது கண்டு சிந்திக்கிறேன் .
chitra --
what are you thinking sir ?
சித்ரா --
அய்யா ,அப்படி என்ன எண்ணுகிறீர்கள் ?
arjuna --
i am thinking that you , with this same lightness of touch and sweetness, are weaving my days of exile into an immortal wreath , to crown me when i return home.
அர்ஜுனா --
இதே மென்தீண்டுதலும் இனிமையும் கொண்டு என் வனவாச நாட்களை நீ ஒரு அழிவிலா மாலை என வனைந்து கொண்டிருப்பதையும் ,
நான் நாடு திரும்புகையில் அதனை எனக்கு முடி சூட்டுவாய் என்பதை யும் எண்ணிக் கொண்டிருக்கிறேன் .
chitra --
home ! but this love is not for a home !
சித்ரா --
இல்லமா ?
ஆனால் இந்தக் காதல் இல்லம் உகந்ததல்ல .
arjuna --
not for a home ?
அர்ஜுனா --
இல்லம் தகாததா ?
chitra --
no . never talk of that .
take to your home what is abiding and strong .
leave the little wild flower where it was born ;
leave it beautifully to die at the day's end among all fading blossoms and decaying leaves. do not take it to your palace hall to fling it on the stony floor which knows no pity for things that fade and are forgotten .
சித்ரா --
பொருந்தாததே ..
அதுபற்றிப் பேசாதீர்கள் .
எது உறுதியும் நிரந்தரமும் ஆனதோ அதனையே இல்லம் எடுத்துச் செல் லுங்கள் .
இச் சிறிய வன மலரை அது பிறந்த மண்ணி லேயே விட்டுச் செல்லுங்கள் .
அதனை உங்கள் அரண்மனை மாடங்கள் எடுத் துச் சென்று , வாடிடவும் மறக்கப்படவும் கூடிய பொருட்களி ன் மீது இரக்கமற்ற கல் தரைகளின் மீது வீசி எறியாதீர்கள்
arjuna --
is ours that kind of love ?
அர்ஜுனா --
நம் காதல் அத்தகைத்தா ?
chitra --
yes , no other !
why regret it ?
that which was meant for idle days should never outlive them .
joy turns into pain when the door by which it should depart is shut against it .
take it and keep it as long as it lasts .
let not the satiety of your evening claim more than the desire of your morning could earn ...
the day is done .
put this garland on .
i am tired .
take me in your arms , my love .
let all vain bickerings of discontent die away at the sweet meeting of our lips .
சித்ரா --
ஆம் ..வேறு வகைப்பட்டதல்ல !
ஏன் வருந்துகிறீர்கள் ?
வீண் பொழுதுகளுக்கானவை அவை மீறி வாழ்வதாகாது .
எக்கதவின் வழி மகிழ்ச்சி வெளியேக வேண்டுமோ அது அடைக்கப் பட்டுவிடுமானால் அதுவே துன்பமா ய் மாறிவிடும் .
அதை எடுத்துக் கொள்ளுங்கள் ; எத்துணைக் காலம் அது நீடிக்கிறதோ அதுவரை வைத்து க்கொள்ளுங்கள் .
உன் மாலையின் முழு நிறைவு வேட்கை காலையின் ஈட்டுத் திறனினும் மி கையாய்க் கூடாது .
நாள் முடிந்து போனது .
இந்த மாலையை அணிந்து கொள்ளுங்கள் . .
களைப்பாக இருக்கிறேன் .
என்னை உங்கள் கைகளில் ஏந்திக் கொள்ளுங்கள்
நமது இதழ்களின் இனிய குழைவில் நிறைவி லாது விளைந்த வீண் சச்சரவுகள் எல்லா ம் மடிந்து போகட்டும் .
arjuna --
hush ! listen , my beloved , the sound of prayer bells from the distant village temple steals upon the evening air across the silent trees !
அர்ஜுனா --
ஷ் .!
பிரியமானவளே ,கேள்.
தொலைதூரச் சிற்றூர்க் கோயிலின் வழிபாட்டு மணியோசை இந்த மாலைக் காற்று ஏறி அமைதியான மரங்கள் பு குந்து திருட்டுத் தனமாய் வருகு து கேள்.!
.
--தமிழாக்கம்
சந்திர கலாதர் .
28.11.2012 / புதன் /கார்த்திகை 13 /
காலை 11.30

No comments:
Post a Comment