chitra
scene 2
களம் 2
[rabindranath tagore ]
arjuna:
was i dreaming or was what i saw by the lake truly there? sitting on a mossy turf, i mused over bygone years in the sloping shadows of the evening , when slowly there came out from the folding darkness of foliage an apparition of beauty in the perfect form of a woman , and stood on a white slab of stone at the water's brink. it seemed that the heart of the earth must heave in joy under her bare white feet . methought the vague veilings of her body should melt in ecstasy into air as the golden mist of dawn melts from off the snowy peak of the eastern hill. she bowed herself above the shining mirror of the lake and saw the reflection of her face. she started up in awe and stood still: then smiled , and with a careless sweep of her left arm unloosed her hair and let it trail on the earth at her feet. she bared her bosom and looked at her arms , so flawlessly modelled , and instinct with an exquisite caress. bending her head she saw the sweet blossoming of her youth and the tender bloom and blush of her skin . she beamed with a glad surprise. so, if the white lotus bud on opening her eyes in the morning were to arch her neck and see her shadow in the water, would she wonder at herself the live-long day, but a moment after the smile passed from her face and a shade of sadness crept into her eyes. she bound up her tresses, drew her veil over her arms and sighing slowly, walked away like a beauteous evening fading into the night. to me the supreme fulfilment of desire seemed to have been revealed in a flash and then to have vanished....but who is that pushes the door?
[enter chitra, dressed as a woman]
ah! it is she. quiet , my heart !
fear me not, lady ! i am a kshatriya.
அர்ஜுனா --
நான் கனவில் இருந்தேனா அல்லது ஏரிக்கரையில் நான் கண்டது உண்மை நிகழ்வா ?
பாசிபடர்ந்த புற்தரை மீது அமர்ந்தபடி ,மாலைநேரச் சாய்நிழலில் கடந்த காலம் பற்றிய சிந்தனை மூழ்கி இருந்தேன் .
அப்போது இலைதழைகளின் முடங்கும் இருள் இருந்து ஒரு அழகின் வடிவம் முழுமையான பெண் உருவில் மெல்ல வெளியேகி ,நீர்விளிம்பு அருகே ஒரு வெண் கற்தகட்டின் மீது நின்றது .இப் புவியின் இதயமே அவளது வெண்ணிற வெறுங் காலடியில் ஆனந்தத்தில் பூரித்திருக்க வேண்டும்
என்று தோன்றியது .கீழ்த்திசைக் குன்றுகளின் உறைபனிமுகடுகளில் இருந்து உருகி எழும் இளம் காலைப் பொன் பனிப்புகை போல் அவளது மேனியின் தெளிவிலா மறைப்புகள் உருகிடவேண்டும் என்று நான் எண்ணினேன் .ஏரியின் மிளிரும் கண்ணாடியில் அவள் தலை குனிந்தாள் ;தன் முகத்தின் எதிரொளிப்பைக் கண்டாள் .பணிவோடு இயைந்த வியப்பில் திடுக்கிட்டுச் சிலை போலானாள் ;பின் சிறு முறுவலிட்டாள் ;தன் இடது கரத்தின் ஒரு தன்னிச்சையான விசிறலில் தன் சிகையை அவிழ்த்தாள் ;அதை அவள் காலடி நிலத்தில் பரவவிட்டாள் ;தன் மார்புக் கச்சை நீக்கிப் பிழையே இன்றி வடிக்கப்பட்ட தன் கரங்களை ,மிக நேர்த்தியான தழுவல் உள்ளுணர்வுடன் ,பார்த்தாள் .இனிமையாய்ப் பூத்திருக்கும் தன் இளமையையும் மெலிதாய் மலர்ந்து செம்மை படர்ந்த தன் மேனியையும் பார்த்தாள். ஓர் ஆனந்த வியப்புடன் மிளிர்ந்தாள் .ஆம் ,காலையில் வெண்தாமரை மொட்டு விழி மலர்ந்து ,தன் நெடிய கழுத்தினை வளைத்து இம்மங்கையின் எதிரொளிப்பைத் தடாகத்தில் காணக் கூடுமானால், அது நாள் முழுவதும் தன்னைப் பற்றிய திகைப்பில் வியக்குமன்றோ.!ஆனால் ஒரு நொடியில்
அப்புன்முறுவல் அவள் வதனம் அகன்றது;சோகத்தின் ஒரு நிழல் அவள் விழிகளில் படர்ந்தது.அவள் தன் கூந்தலை முடிந்தாள் ; முந்தானையால் தனது கரங்களை மறைத்தாள் ;மெல்லிய பெருமூச் செறிந்தாள் ; ஒரு அழகிய மாலைவேளை இரவுள் மறைவதுபோல் அவள் நடந்தாள் . எனக்கு ஆசையின் வெகு உன்னத நிறைவு மின் வெட்டாய் வெளிப்பட்டு பின் நொடியில் மறைந்ததே ..ஆனால் கதவினை யார் தள்ளுவது ?
[பெண் ஆடையில் சித்ரா நுழைகிறாள் ]
ஆஹா !இது அவளே ....இதயமே ,அமைதி கொள் !
பெண்ணே,பயம் கொள்ளாதே !
நான் ஒரு க்ஷத்திரியன் .
chitra --
honoured sir, you are my guest . i live in this temple . i know not in what way i can show you hospitality .
சித்ரா :
பெருமையுடையோரே , நீங்கள் எனது விருந்தினர் . நான் இந்தக் கோயிலில் வாழ்கிறேன் . விருந்தோம்பலைத் தங்களுக்கு எவ்வாறு செய்வது எனத் தெரியாது நிற்கிறேன் .
arjuna --
fair lady,the very sight of you is indeed the highest hospitality . if you will not take it amiss i would ask you a question .
அர்ஜுனா ---
அழகிய நங்கையே ,உனது தோற்றமே உண்மையில் மிக உயரிய விருந்தோம்பல் அல்லவா . இதனைத் தவறாக எடுத்துக் கொள்ளாவிட்டால் ஒரு கேள்வி நான் உன்னைக் கேட்கட்டுமா ?
chitra --
you have permission
சித்ரா ---
தங்களுக்கு அனுமதி உண்டு .
arjuna --
what stern vow keeps you immured in this solitary temple, depriving all mortals of a vision of so much loveliness ?
அர்ஜுனா --
எக்கொடும் தவம் உன்னை இந்தத் தனிமை ஆலயத்தில் சிறைப்படுத்தி உள்ளது ?மிகப்பெரும் அழகின் தோற்றத்தை எல்லா மானுடர்களிடம் இருந்தும் பறித்திருக்கிறது ?
chitra --
i harbour a secret desire in my heart , for the fulfilment of which i offer daily prayers to lord shiva.
சித்ரா --
என் இதயத்தில் ஒரு அந்தரங்க ஆசையை நான் வைத்திருக்கிறேன் ; அது நிறைவேறும் பொருட்டு இறைவன் சிவனார்க்கு நான் தினமும் வழிபாடு செய்து வருகிறேன் .
arjuna --
alas,what can you desire,you who are the desire of the whole world !
from the easternmost hill on whose summit the morning sun first prints his fiery foot to the end of the sunset land have i travelled . i have seen whatever is most precious,beautiful,and great on the earth . my knowledge shall be yours , only say for what or for whom you seek.
அர்ஜுனா ---
ஐயகோ ,ஒட்டுமொத்த உலகின் ஆசையான நீயே எதனை ஆசை கொள்ளக்கூடும் !
காலைக் கதிரோன் தன் கனல் கால்சுவடுதனை முதலில் பதிக்கும் கிழக்குக்கோடி மலையின் உச்சியில் இருந்து அவன் மறையும் மறுகோடிப் புவி முழுதும் பயணித்திருக்கிறேன் நான் .எவைஎவை மிக மிக அரிதானவையோ ,அழகானவையோ ,பெரிதானவையோ அவற்றையெல்லாம் நான் கண்டிருக்கிறேன் . என் பட்டறிவெல்லாம் உனதே; எதை அல்லது யாரை நாடுகிறாய் என்பதைமட்டும் சொல் .
chitra --
he whom i seek is known to all .
சித்ரா --
நான் நாடுவோனை உலகோர் நன்கறிவர் .
arjuna --
indeed ! who may this favourite of the gods be , whose fame has captured your heart ?
அர்ஜுனா --
உண்மையே ! எவரது புகழ் உன் இதயத்தை வாகை சூடியதோ ,கடவுளர்களால் விரும்பப்படும் அவர் யாராகக்கூடும் ?
chitra --
sprung from the highest of all royal houses, the greatest of all heroes is he .
சித்ரா --
அவர் அனைத்து அரச பரம்பரைகளிலும் தலை சிறந்த குடிப்பிறந்தோர் ;வீரர்களில் மாபெரும் வீரர்
arjuna --
lady,offer not such wealth of beauty as is yours on the altar of false reputation . spurious fame spreads from tongue to
tongue like the fog of the early dawn before the sun rises.tell me who in the highest of kingly lines is the supreme here ?
அர்ஜுனா --
பெண்ணே ,பொய்யான கீர்த்தியின் பலிபீடத்தில் உன்னுடையது போன்ற அழகின் செல்வத்தை இரையாக்காதே ;.ஆதவன் எழுதற்கு முன்னான காலை மூடுபனிபோல் பொய்யான புகழ் வாய்ப்பயணம் செய்கிறது .அரச பரம்பரையில் யார் மிக உன்னதமானவர் என்று சொல் .
chitra --
hermit ,you are jealous of other men's fame. do you not know that all over the world the royal house of the kurus is the most famous ?
சித்ரா --
துறவியே ,பிறர் புகழ்மீது பொறாமை கொண்டவர் தாங்கள் ;அனைத்து உலகிலும் உன்னதப் புகழ் கொண்ட அரச பரம்பரை 'குரு ' வம்சம் என்று தங்களுக்குத் தெரியாதோ ?
arjuna --
the house of the kurus !
அர்ஜுனா --
'குரு' பரம்பரையா !
chitra --
and have you never heard of the greatest name of that far-famed house ?
சித்ரா --
தொன்றுதொட்டுப் புகழ் பெற்ற அந்த மாபெரும் அரச பரம்பரை பற்றி தாங்கள் கேள்விப் பட்டதே
இல்லையா ?
arjuna --
from your own lips let me hear it .
அர்ஜுனா --:
உன் அதரங்கள் மூலமே நான் செவிமடுக்கட்டும் .
chitra --
arjuna,the conqueror of the world. i have culled from the mouths of the multitude that imperishable name and hidden it with care in my maiden heart. hermit , why do you look perturbed? has that name only a deceitful glitter ?
say so , and i will not hesitate to break this casket of my heart and throw the false gem to the dust.
சித்ரா --
அர்ஜுனா,அவரே உலகை வாகை சூடியவர் .இறைவா வரம் பெற்ற அந்தப் பெயரை நான் பல்லோர் வாயிலிருந்து கொய்து கவனமாய் என் கன்னி இதயத்துள் ஒளித்திருக்கிறேன் .. துறவியே ,ஏன் தங்கள் பார்வையில் ஓர் கலக்கம் ?அந்தப் பெயர் வெறுமனே ஏமாற்றப் பளபளப்பானதா ?அதுவாயின் சொல்லுங்கள் ;நான் என் இதயச்சிமிழ் உடைத்து அந்தப் பொய் ரத்தினத்தைத் தூக்கி எறியவும் தயங்க மாட்டேன் .
arjuna --
be his name and fame , his bravery and prowess false or true , for mercy's sake do not banish him from your heart --for he kneels at your feet even now .
அர்ஜுனா --:
அவனது பேரும் புகழும் அப்படியே ஆகுக ; அவனது வீரமும் பராக்கிரமும் மெய்யோ அன்றிப் பொய்யோ , கருணை கொண்டு உன் இதயத்தில் இருந்து அவனை வெளி ஏற்றிவிடாதே -ஏன் எனில் இப்பொழுதும் கூட உன் காலடி கிடப்பவன் அவனே ஆகும் .
chitra --
you,arjuna !
சித்ரா --
அர்ஜுனன், தாங்களா !
arjuna --
yes, i am he , the love-hungered guest at your door.
அர்ஜுனா --
ஆம் ,அவனே இவன் ,உனது வாயிலில் காதற்பசியுடன் நிற்பவன் .
chitra
then it is not true that arjuna has taken a vow of chastity for twelve long years ?
சித்ரா --
பின்,அர்ஜுனன் பன்னிரண்டு நெடிய வருடங்களுக்கு பிரம்மச்சரிய [தனிமைநிலை ] விரதம் மேற்கொண்டிருப்பது உண்மை இல்லையா ?
arjuna --
but you have dissolved my vow even as the moon dissolves the night's vow of obscurity.
அர்ஜுனா --
ஆனால் இரவின் இருண்மை விரதத்தை நிலவு கரைப்பதுபோல் ,நீயும் என் விரதத்தையும் கரைத்துவிட்டாய் .
chitra --
oh,shame upon you ! what have you seen in me that makes you false to yourself ? whom do you seek in these dark eyes , in these milk-white arms , if you are ready to pay for her the price of your probity ? not my true self , i know . surely this cannot be love , this is not man's highest homage to woman ! alas ,that this frail disguise , the body , should make one blind to the light of the deathless spirit ! yes, now indeed , i know , arjuna , the fame of your heroic manhood is false.
சித்ரா --
ஓ ,என்ன வெட்கக் கேடு ! என்னிடம் எதைப் பார்த்து , தனக்குத் தாங்களே பொய்யாகிப் போகிறீர்கள் ? தங்கள் நேர்மைத் திறத்தை அவளுக்கு உடைமையாக்கிடத் தாங்கள் முன்வரின் , இந்தக் கரிய விழிகளில் , பாலன்ன கரங்களில் யாரைத் தேடுகிறீர்கள் ?எனது உண்மை ஆன்மாவையல்ல என்பது அறிவேன் .உறுதியாக இது காதல் ஆகாது; ஒரு பெண்ணிற்கு ஒரு ஆணின் மிக உயரிய பெருமை செய்தலும் ஆகாது! ஐயகோ ,இந்த நலிந்த வேடம் , இந்த மேனி ஒருவனை இறவா ஆன்மாவின் ஒளி உணராக் குருடாக்கக் கூடுமா ! ஆம்,அர்ஜுனா,உண்மையில் இப்போ து அறிகிறேன் ..தங்களது வீரதீர ஆண்மையின் புகழ் பொய்யானது .
arjuna --
ah , i feel how vain is fame , the pride of prowess ! everything seems to me a dream . you alone are perfect ; you are the wealth of the world , the end of all poverty , the goal of all efforts , the one woman ! others there are who can be but slowly known . while to see you for a moment is to see perfect completeness once and forever .
அர்ஜுனா :
ஆ , துணிச்சலின் பெருமையான புகழ் என்பது எத்தனை வீணானது என்பது உணர்கிறேன் ! ஒவ்வொன்றும் ஒரு கனவு போலவே எனக்குத் தோன்றுகிறது . நீ மட்டுமே நிறைவு கொண்டவள் ;நீதான் இவ்வுலகின் செல்வம் ; அனைத்து வறுமையின் முடிவும் நீயே ;எல்லா முயற்சிகளின் இலக்கும் ,ஒரே ஒரு பெண்மையும் நீதான் !பிறர் இருப்பவர் எல்லாம் மெதுவாக மட்டுமே அறியப்படலாம் . ஆனால் உன்னை ஒரு நொடி கண்டாலே ,முற்றிலும் முழுமையை எப்பொழுதும் கண்டதே போன்றது
chitra --
alas, it is not i , not i , arjuna ! it is the deceit of a god . go , go , my hero , go . woo not falsehood ,
offer not your great heart to an illusion . go.
சித்ரா --
ஐயகோ ,அது நான் அல்ல ,நான் அல்ல ,அர்ஜுனா ! அது ஒரு கடவுளின் ஏமாற்று வேலை .செல்லுங்கள் ,போய்விடுங்கள் ,எனது வீர நாயகனே ,சென்றுவிடுங்கள் . பொய்மையைக் கெஞ்சாதீர் ,ஒரு மாயைக்கு உமது பெரும் இதயத்தைப் பலி கொடாதீர் .சென்று விடுங்கள்
தமிழாக்கம்
சந்திர கலாதர்
27.11.2012 /கார்த்திகை 12 /மணி 1 /இரவு

--
S.CHANDRA KALAADHAR
Reply | Forward |
Click here to Reply or Forward
|

No comments:
Post a Comment