chitra
rabindranath tagore
சித்ரா
scene 8
களம் 8
&
villagers--
who will protect us now ?
ஊர்மக்கள் --
இப்போது நம்மை யார் காப்பார்கள் ?
arjuna --
why , by what danger are you threatened ?
அர்ஜுனா --
ஏன்,எத்தீங்கு உங்களை அச்சுறுத்துகிறது ?
villagers --
the robbers are pouring from the northern hills like a mountain flood to devastate our village .
ஊர் மக்கள் --
எங்கள் ஊரினைக் கொள்ளைகொள்ள
கொள்ளையர்கள் வடபுற மலையிலிருந்துமலை வெள்ளம் போல் புகுந்துகொண்டிருக்கின்றனர் .
arjuna --
have you in this kingdom no warden ?
அர்ஜுனா --
உங்கள் நாட்டில் காவலர்கள் யாரும் இல்லையா?
villagers --
princess chitra was the terror for all evil-doers .
while she was in this happy land we found natural deaths , but had no other fears .
now she has gone on a pilgrimage , and none knows where to find her
ஊர்மக்கள் --
தீங்கு இழைப்போருக்கு சிம்ம சொப்பனமாய் இருந்தார் இளவரசி சித்ரா .
அவர்கள் இந்த இனிய நாட்டில் இருந்தவரை இயற்கை மரணங்கள் அன்றி
வேறு எப்பயங்களும் இல்லாது இருந்தோம்.
இப்போது அவர்கள் புனிதப்பயணம் சென்று விட்டார்கள் ;
அவரை எங்கு காண்பது என்று எவர்க்கும் தெரியவில்லை .
arjuna--
is the warden of this country a woman ?
அர்ஜுனா--
இந்நாட்டின் காவலர் ஒரு பெண்மணியா ?
villagers --
yes , she is our father and mother in one. [exeunt ]
ஊர்மக்கள் --
ஆம்..அவர்களே எங்கள்தாய் தந்தை போலாவார்.
[ enter chitra ] [வெளியேறுகிறார்கள் ]
சித்ரா நுழைகிறார்
chitra --
why are you sitting all alone ?
சித்ரா --
ஏன் தன்னந் தனியாக அமர்ந்திருக்கிறீர்கள் ?
arjuna --
i am trying to imagine what kind of woman princess chitra may be .
i hear so many stories of herfrom all sorts of men .
அர்ஜுனா --
இளவரசி சித்ரா எப்படிப்பட்ட பெண்மணியாக இருப்பாள் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் .
பல்விதமான ஆண்மக்களிடமிருந்தும் அவள் குறித்து பற்பல கதைகளை நான் கேட்கிறேன்.
chitra -
ah , but she is not beautiful .
she has no such lovely eyes as mine, dark as death .
she can pierce any target at will ,but not our hero's heart .
சித்ரா -
ஹா ...ஆனால் அவள் அழகி அல்ல .
அவள் என்போல் மரணக் கரிய அழகிய விழிகள் கொண்டவள் அல்ல .
அவளால் எந்த இலக்கினையும் துளைக்க முடியும் ;
ஆனால் எமது மாவீரனின் இதயத்தை மட்டும் இயலாது..
arjuna --
they say that in valour she is a man , and a woman in tenderness .
அர்ஜுனா--
தீரத்தில் அவள் ஓர் ஆண் என்றும் ,மென்மையில் ஓர் பெண் என்றும் அவர்கள் சொல்கிறார்களே .
chitra --
that , indeed , is her greatest misfortune .
when a woman is merely a woman ;
when she winds herself round and round men's hearts with her smiles and sobs and services
and caressing endearments ;
then she is happy.
of what use to her are learning and great achievements ?
could you have seen her only yesterday in the court of the lord shiva's temple by the forest path ,
you would have passed by without deigning to look at her .
but have you grown so weary of woman's beauty that you seek in her a man's strength ?
with green leaves wet from the spray of the foaming waterfall ,
i have made our noonday bed in a cavern as dark as night .
there the cool of the soft green mosses thick on the black and dripping stone kisses your eyes to sleep .
let me guide you thither .
சித்ரா-
அதுவே உண்மையில் அவளது மாபெரும் துயரமாகும் .
ஒரு பெண் ஒரு எளிய பெண்ணாக மட்டும் இருக்கையில்தான் --;
தனது புன்னகைகளால் ,கேவல்களால், பணிகளால் மற்றும் தழுவும் நெருக்கங்களால் ஆண்களின்
இதயங்களைச் சுற்றிச் சுற்றி வளைக்கையில்தான் இன்பமாக இருக்கமுடிகிறது.
கல்வி கேள்விகளிலும் பெரும் சாதனைகளிலும் அவளுக்கு என்ன பயன் கிட்டக்கூடும் ?
காட்டுப்பாதையில் உள்ள அந்தச் சிவன் கோயில் முற்றத்தில் நேற்று நீ அவளைக் கண்டிருக்க முடியுமானால்
ஒரு பார்வைகூட வீச மனம் இன்றி அசட்டையாய் அவளைக் கடந்து சென்றிருப்பாய்
ஆனால் பெண்கவர்ச்சியில் வெகுவாய் அலுத்துப்போய் அவளிடம் ஆணின் சக்தியை நீ தேட முற்படுகிறாயா?
நுரைக்கும் அருவியின் தெறிப்பில் நனைந்திருக்கும் பசும் இலைகளால் ,இரவு போன்ற ஒருகுகை ஒன்றில் நமது
நண்பகல் மஞ்சம் விரித்திருக்கிறேன் .
கறுத்த ஈரித்துச் சொட்டும் பாறைகளின் மென்பசும் பாசிகளின் குளிர் உன் விழிகளைத் முத்தமிட்டு மூடச் செய்யும்
உன்னை நான் அங்கு இட்டுச் செல்கிறேன் ..
arjuna --
not to-day ,beloved
அர்ஜுனா -
இன்று வேண்டாம் ,அன்பே .
chitra --
why not to-day ?
சித்ரா--
ஏன் இன்று வேண்டாம் ?
arjuna --
i have heard that a horde of robbers has neared the plains .
needs must i go and prepare my weapons to protect the frightened villagers .
அர்ஜுனா --
கொள்ளையர்கள் கூட்டம் ஒன்று சமவெளியை நெருங்கிவிட்டதாக நான் கேள்விப்பட்டேன்.
நான் செல்வது தேவையாகிறது .
அச்சமுற்றிருக்கும் ஊர்மக்களை காத்திட என் ஆயுதங்களைத் தயார்ப்படுத்தவேண்டும் .
chitra --
you need no fear for them .
before she started on her pilgrimage ,
princess chitra had set strong guards at all the frontier passes
சித்ரா--
அவர்களைப் பற்றிய கவலை உங்களுக்குத் தேவை இல்லை .
தான் யாத்திரை துவங்குவதற்கு முன்பே இளவரசி சித்ரா எல்லா எல்லைப் பாதைகளிலும் பலம் கொண்ட பாதுகாப்புகள் அமைத்து விட்டாள் .
arjuna --
you permit me for a short while to set about a kshatriya's work.
with new glory will i ennoble this idle arm ,
and make of it a pillow more worthy of your head .
அர்ஜுனா--
ஒரு வீர மறவனின் பணியை மேற்கொள்ள ஒரு சிறு போழ்துக்கு அனுமதி தா.
இந்த சோம்பலான புயத்திற்கு ஒரு புதிய மேன்மை கொடுத்து
உன் தலை சாய்த்துப் படுக்க அதனை மேலும் தகுதி ஆக்குகிறேன் .
chitra --
what if i refuse to let you go ,
if i keep you entwined in my arms ?
would you rudely snatch yourself free and leave me ?
go then !
but you must know that the liana , once broken in two , never joins again .
go , if your thirst is quenched .
but , if not , then remember that the goddess of pleasure is fickle , and waits for no man .
sit for a while , my lord !
tell me what uneasy thoughts tease you .
who occupied your mind to-day ?
is it chitra ?
சித்ரா --
தங்களை அனுமதிக்காது மறுத்தால் --
தங்களை என் கரங்களுள் அன்புச் சிறை வைத்தால் ?
முரட்டுத் தனமாக அப்போது எனைப் பிய்த்துப் பிரிந்து செல்வீர்களா ?
அப்படியாயின் போய் விடுங்கள்.
ஆனால் ஒன்றை நீங்கள் கட்டாயம் புரிந்து கொள்ளவேண்டும் ;
காட்டுக் கொடி இரண்டாக ஒடிந்துவிடின் மறுபடி இணையவே இணையாது.
உங்கள் தாகம் தணிந்து விட்டது என்றால் போய்க் கொள்ளுங்கள் .
ஆனால் ,.அப்படி இல்லை எனின் இன்பத் தேவதை உறுதி இல்லாதவள் ,
எம்மனிதன் வருகை நாடியும் காத்திருக்க மாட்டாள் என்பதும் புரிந்து கொள்ளுங்கள் .
தலைவ ! சற்று அமருங்கள் .
எந்த நிம்மதி அற்ற எண்ணங்கள் உங்களை ஏளனம் செய்கின்றன என்று என்னிடம் சொல்லுங்கள்.
எவர் உங்கள் மனதில் இன்று குடியேறி விட்டார் ?
அது சித்ராவா ?
arjuna --
yes , it is chitra .
i wonder in fulfilment of what vow she has gone on her pilgrimage .
of what could she stand in need ?
அர்ஜுனா--
ஆம், சித்ராதான் .
என்ன சபதம் நிறைவேற வேண்டும் என்று அவள் யாத்திரை மேற்கொண்டுள்ளாள்
என்ற வியப்பில் ஆழ்ந்திருக்கிறேன் .
எது அவளது தேவையாய் இருக்கும் ?*
chitra --
her needs ?
why , what has she ever had , the unfortunate creature ?
her very qualities are as prison walls , shutting her woman's heart in a bare cell .
she is obscured , she is unfulfilled .
her womanly love must content itself dressed in rags ;
beauty is denied her .
she is like the spirit of a cheerless morning ,
sitting upon the stony mountain peak ,
all her light blotted out by dark clouds .
do not ask me of her life .
it will never sound sweet to man's ear.
சித்ரா--
அவள் தேவைகளா ?
ஏன்,எத்தேவைகள்தான் அவள் இதுவரை பெற்றிருந்தாள்,அந்த ராசி இல்லாதவள் ?
அவளது குணங்களேதான் அவளுக்கு சிறைச் சுவர்களாக்கி ,
வெறுமையில் அவள் பெண் இதயத்தை அடைத்துப் போட்டுவிட்டன
அவள் மறைக்கப்பட்டவள் ;
அவள் நிறைவிலாதவள் .
அவளது பெண்மைக் காதல் , கந்தைகளையே அணிந்து நிறைவு பெறவேண்டி உள்ளது .
அழகு அவளுக்கு மறுக்கப் பட்டு விட்டது .
இருண்ட மேகங்களால் எல்லா ஒளியும் உறிஞ்சப்பட்ட , பாறை மலை முகட்டில் .
அமர்ந்து கொண்டுள்ள ஒரு துடிப்பிலாக் காலை நெஞ்சம்போல் அவள் இருக்கிறாள்
அவள் வாழ்வு பற்றி என்னைக் கேட்காதே .
ஒரு ஆணின் செவிகளுக்கு அது இனிமை பயக்காது..
arjuna -
i am eager to learn all about her .
i am like a traveller come to a strange city at midnight .
domes and towers and garden trees look vague and shadowy ,
and the dull moan of the sea comes fitfully through the silence of sleep .
wistfully he waits for the morning to reveal to him all the strange wonders .
oh , tell me her story .
அர்ஜுனா--
அவள் பற்றித் தெரிந்துகொள்ள நான் ஆவலாக இருக்கிறேன்.
நள்ளிரவில் ஒரு புதிய நகருக்கு வந்து சேர்ந்த வழிப்போக்கன் போல் நான் இருக்கிறேன் .
கிண்ணக் கூரைகளும் உய்ர்மாடங்களும் நந்தவன மரங்களும்
தேய்ந்ததுபோல்,நிழல் வடிவாய்த் தெரிகின்றன.
கடலின் சுரத்தற்ற முனகல் தூக்கத்தின் நிசப்தத்தின் ஊடாய் விட்டுவிட்டும் வருகிறது
ஒரு எதிர்பார்ப்புடன் காலைவிடிதலுக்காக ,
அதனில் எல்லா வினோத வியப்புகளும் தனக்கு விளக்கமாகும்
என்று காத்திருக்கிறான்..
ஓ ! அவள் கதையை எனக்குக் கூறு.
chitra--
what more is there to tell ?
சித்ரா--
இதற்கு மேலும் கூற என்ன இருக்கிறது?
arjuna --
i seem to see her, in my mind's eye ,
riding on a white horse , proudly holding the reins in her left hand ,
and in her right a bow ,
and like the godess of victory dispensing glad hope all around her .
like a watchful lioness she protects the litter at her dugs with a fierce love .
woman's arms , though adorned with naught but unfettered strength , are beautiful !
my heart is restless , fair one ,
like a serpent reviving from his long winter's sleep .
come , let us both race on swift horses side by side ,
like twin orbs of light sweeping through space .
out from this slumbrous prison of green gloom ,
this dank , dense cover of perfumed intoxication , choking breath .
அர்ஜுனா--
என் மனதின் விழிகளில் அவளைப் பார்ப்பதுபோல் உணர்கிறேன் ;
ஒரு வெண் புரவி ஏறி ,கர்வத்துடன் தன இடக்கரத்தில் கடிவாளப் பட்டை பிடித்து ,
வலக் கரத்தில் ஒரு வில் தாங்கி ,
ஒரு வெற்றித் தேவதை தன்னைச் சுற்றி இனிய நம்பிக்கை அள்ளித் தருவதாய் நான் பார்க்கிறேன்.
ஒரு கவனமான பெண் சிங்கம் தன மடி சூழ்ந்த குட்டிகளை
வெறிகொண்ட பாசத்தில் எப்படிக் காக்குமோ அப்படித் தோன்றுகிறாள்.
பெண்ணின் கரங்கள்,யாதுமே இல்லாது
ஆனால் தளையற்ற வலிமையால் அலங்கரிக்கப்பட்டால் பொலிவாக உள்ளன ..
அழகியே, என் மனம் ,நெடிய பனிக்காலஉறக்கம் விடுத்து
புத்துயிர் பெற்ற பெரும் பாம்புபோல் தவிக்கிறது .
இரு ஒளிக்கோளங்கள் விண்வெளியில் சுழன்று செல்வதுபோல் ,
நாம் இருவரும் பக்கம் பக்கமாக வேகக் குதிரைகள் ஏறி பந்தயமாய் விரைந்து செல்வோம் வா .
இந்த ஈரித்த ,அடர்ந்த நறுமண போதைச் சூழலின் மூச்சுத் திணறல் ,
இப்பசும் வண்ண சோக உறக்கச் சிறை நீங்கிடுவோம்
chitra --
arjuna , tell me true ,if , now at once ,
by some magic i could shake myself free from this voluptuous softness ,
this timid bloom of beauty shrinking from the rude and the healthy touch of the world ,
and fling it from my body like borrowed clothes,
would you be able to bear it ?
if i stand up straight and strong with the strength of a daring heart
spurning the wiles and arts of twining weakness ,
if i hold my head high like a tall young mountain fir ,
no longer trailing in the dust like a liana ,
shall i then appeal to man's eye ?
no , no , you could not endure it .
it is better that i should keep spread about me
all the dainty playthings of fugitive youth ,
and wait for you in patience .
when it pleases you to return ,
i will smilingly pour out for you
the wine of pleasure in the cup of this beauteous body .
when you are tired and satiated with this wine ,
you can go to work or play ;
and when i grow old i will accept humbly and gratefully whatever corner is left for me .
would it please your heroic soul if the playmate of the night
aspired to be the helpmeet of the day ,
if the left arm learnt to share the burden of the proud right arm ?
சித்ரா --
உண்மையாகச் சொல்லுங்கள் , அர்ஜுனா !
இந்நொடியே ,ஏதோ ஒரு மாயத்தால் இந்த வசீகர மென்மையிலிருந்து
என்னை உலுக்கி விடுவித்துக் கொள்ளக் கூடும் எனில் ,
முரட்டுத்தனமான , நலமான உலகின் தீண்டுதலினின்றும்
அழகின் வெட்கிடும் மலர் சுருங்கிக்கொள்ள இயலுமானால் ,
அதனை என் மேனியில் இருந்து இரவல் வாங்கிய உடைகளைப்போல் வீசி எறிய முடிந்தால்
உங்களால் அதனைத் தாங்கிக் கொள்ளக் கூடுமா ?
கொடிஎனப் படரும் பலவீனத்தின் தந்திரக் கலைகளை இகழ்ந்து ஒதுக்கி ,
ஒரு துணியும் இதயத்தின் வலிமை கொண்டு நேராகவும் பலம் கொண்டும் நான் எழுந்தால் --
தூசியில் படர்ந்து அலையும் ஒரு காட்டுக் கொடி போல் இனி இல்லாது
ஒரு நெடிதுயர்ந்த மலைத் தேக்குபோல் என் தலை உயர்த்தி நின்றால்
அப்போது ஒரு ஆணின் விழிகளைக் கவர்வேனா ?
முடியாது , முடியாது ..உங்களால் அதை சகித்துக் கொள்ள முடியாது
மின்னி மறையும் இளமையின் நேர்த்தியானவிளையாடல்களை எல்லாம்
எனைச் சுற்றிப் பரப்பிக்கொண்டு
பொறுமையாக உங்களுக்காகக் காத்திருத்தலே மேன்மையானது .
எப்பொழுது திரும்புவதற்கு உங்கள் மனம் இசைகிறதோ ,
அப்போது புன்னகையுடன் என் அழகிய மேனிக் கோப்பையில் இன்ப மது ஊற்றித தருவேன் .
எப்பொழுது களைப்படைந்து இம்மதுவில் நிறைவு கொள்கிறீர்களோ
அப்போது உங்கள் பணிக்கோ விளையாட்டிற்கோ செல்லலாம் .
நான் முதுமை அடைகையில் எனக்கென எந்த மூலை இருக்கிறதோ
அதனைப் பணிவோடு ஏற்றுக் கொள்வேன் ..
உங்களது இரவின் விளையாட்டு நங்கை உன் பகலின் உதவிக்கரமாகச் செயல்படுவதும்
இடது கரம் பெருமிதம் கொண்ட வலது கரத்தின் சுமையை பங்கிட்டுக் கொள்ளப் புரிந்து கொள்வதும்
உங்களது வீர நெஞ்சிற்கு மகிழ்ச்சி தருமா ?
arjuna --
i never seem to know you aright .
you seem to me like a goddess hidden within a golden image .
i cannot touch you ,
i cannot pay you my dues in return for your priceless gifts .
this my love is incomplete.
sometimes in the enigmatic depth of your sad look ,
in your playful words mocking at their own meaning ,
i gain glimpses of a being trying to rend asunder the langurous grace of her body ,
to emerge in a chaste fire of pain through a vaporous veil of smiles.
illusion is the first appearance of truth .
she advances towards her lover in disguise .
but a time comes when she throws off her ornaments and veils
and stands clothed in naked dignity .
i grope for that ultimate you , that bare simplicity of truth .
why these tears , my love ?
why cover your face with your hands ?
have i pained you , my darling ?
forget what i said .
let each separate moment of beauty come to me like a bird of mystery
from its unseen nest in the dark bearing a message of music .
let me forever sit on the brink of its realization ,
and thus end my days .
அர்ஜுனா---
உன்னை ஒருபோதும் நான் சரிவரப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை
நீ தங்கப பதுமைக்குள் மறைக்கப்பட்ட ஒரு தேவதைபோல் எனக்குத் தோன்றுகிறாய்
உன்னை நான் தொட முடியாது ;
உனது விலைமதிப்பற்ற பரிசுகளுக்கு மாற்றாக என் கடனை நான் திருப்பிச் செலுத்த இயலாது .
அவ்வாறாக என் காதல் முழுமை அற்றது .
சில நேரங்களில் உனது சோகப் பார்வையின் கலங்கிய ஆழங்களில்--
உனது விளாயாட்டு மொழிகள் , தம் கருத்துக்களையே கேலி செய்யும் பாங்கில்-
தனது சோர்ந்த அழகு மேனியையே கிழித்துத் துண்டித்துக் கொண்டு
ஒரு புன்னகைப் புகைத் திரை ஊடாய்
ஒரு புனிதமான வலி நெருப்பில் வெளியேகத் தவிக்கும்
ஒரு ஜீவனின் தோற்றத்தை என்னால் காண முடிகிறது.
மாயைதான் பேருண்மை தோற்றுவதற்கான முதல் அறிகுறி
அவள் தன காதலனை நோக்கி மாறுவேடத்தில் நெருங்குகிறாள்
ஆனால் ஒரு நிமித்தம் எழுகிறது
அப்போது அவள் தன அணிகலன்களையும் மறைப்புகளையும் களைகிறாள் .
நிர்வாணக் கண்ணியத்துடன் மட்டுமே அவன் முன் நிற்கிறாள் .
அத்தகைய இறுதிநிலை ' உன்னை '
அந்த அப்பட்டமான எளிய உண்மையை நான் தேடித் தடுமாறுகிறேன் .
அன்பே , ஏன் இந்தக் கண்ணீர் ?
உன் முகத்தை ஏன் கைகளால் மறைத்துக் கொள்கிறாய் ?
என் அன்பே ,நான் வலி தந்து விட்டேனா ?
நான் சொன்னதை மறந்து விடு .
இப்போதிருப்பதிலேயே நிறைவு கொள்கிறேன்
இசையின் சேதி தாங்கி இருளில் மறைந்த கூடுகளில் இருந்து மாயப் பறவை வருவதுபோல்
அழகின் தனித்தனி நொடியும் என்னைச் சேரட்டும் .
நான் நம்பிக்கையுடன் அதனைப் புரிதலின் விளிம்பில்
காலம் எல்லாம் அமர்ந்திருக்கட்டும் .
அங்ஙனமே என் நாட்களை முடித்துக் கொள்ளட்டும்
--தமிழாக்கம்
சந்திர கலாதர்
28.11.2012 / புதன் /கார்த்திகை 13
இரவு 11