Saturday, July 7, 2012

கீதாஞ்சலி ---[ 86 ]
&
உனது பணியாள் மரணம் என் கதவருகில் --
தெரியாத கடல் கடந்து
உன் அழைப்பை என் இல்லம் சேர்த்திருக்கிறார் .
இரவு இருண்டும்
என் இதயம் பயந்தும் உள்ளன -
இருப்பினும் விளக்கை ஏந்தி
என் கதவைத் திறந்து
தலை தாழ்ந்து அவரை வரவேற்பேன் .
உனது செய்தியாளர் அல்லவா
என் கதவருகில் நிற்கிறார் .
கூப்பிய கரங்களுடனும்
விழிநீருடனும்
அவரை வணங்கிடுவேன் ;
எனது இதயக் கருவூலத்தை
அவர் பாதங்களில் வைத்து வழிபடுவேன் .
எனது காலையில்
ஒரு கரிய நிழலை விட்டு விட்டு
தன் பணி முடித்து அவர் திரும்பிடுவார் ;
வெறிச்சோடிப்போன என் இல்லத்தில்
சோகம் தோய்ந்த என் ஆன்மா மட்டுமே இருக்கும் --
அதுவே உனக்கு என் இறுதிப் படையலாக இருக்கும் .

-------ரபீந்தரநாத் தாகூர் .
[ தமிழ் ஆக்கம் ---சந்திர கலாதர் ]
&
gitanjali--86.
death ,thy servant , is at my door.
he has crossed the unknown sea and brought thy call to my home.
the night is dark and my heart is fearful--
yet i will take up the lamp, open my gates and bow to him my welcome.
it is thy messanger who stands at my door.
i will worship him with folded hands and with tears.
i will worship him placing at his feet the treasure of my heart.
he will go back with his errand done ,leaving a dark shadow on my morning ;
and in my desolate home only my forlorn self will remain as my last offering to thee.
-----rabindranath tagore.

No comments:

Post a Comment