Thursday, July 12, 2012

தோட்டக்காரன் --[ 57 ]
ரபீந்தரநாத் தாகூர்
&
உலகமே !
உனது மலரைக் கொய்து விட்டேன்
#
என் இதயத்தோடு
அதைச் சேர்த்து அணைத்தேன்
அதன் முள் குத்தியது .
#
நாள் தேய்ந்து இருண்டது
மலரோ வாடிப் போனது
ஆனால் வலியோ தேங்கி நின்றது .
#
நறுமணத்தோடும் பெருமிதத்தோடும்
மென்மேலும் மலர்கள்
உலகே உனை அடையும் !
#
ஆனால் மலர் திரட்டும் என் நேரம் முடிகிறது
கரிய இரவெல்லாம்
என் ரோஜா என் வசம் இல்லாது
வலி மட்டுமே நின்று விடுகிறது .
[ தமிழ் ஆக்கம் ]
---சந்திர கலாதர்
the gardener--[ 57 ]
&
i plucked your flower, o world !
i pressed it to my heart and the thorn pricked.
when the day waned and it darkened,
i found that the flower had faded,
but the pain remained.
more flowers will come to you
with perfume and pride ,o world !
but my time for flower-gathering is over,
and through the dark night
i have not my rose ,
only the pain remains.

---rabindranath tagore.

No comments:

Post a Comment