தோட்டக்காரன் --[ 4 8 ]
ரபீந்தரநாத் தாகூர்
&
என் அன்பே !
உனது இனிமையின் தளைகளில் இருந்து என்னை விடுதலை செய் -
இனியும் வேண்டாம் இந்த முத்தங்களின் மதுரசம் .
இந்த அடர்ந்த நறுமண மஞ்சுமூட்டம் என் இதயம் அடைக்கிறது .
கதவுகள் திற ; காலை ஒளிக்கு வழி கொடுத்திடு .
உனது தழுவல்களின் மடிப்புகளில் சுற்றுண்டு ,உன்னில் என்னை இழந்தேன் .
உனது மாயங்களில் இருந்து என்னை விடுவி ;
என் ஆண்மை எனக்குத் திருப்பித் தா ;
அப்போதுதான் என் விடுதலை கொண்ட இதயத்தை உனக்கு அளிக்கக் கூடும் .
&
-------தமிழ் ஆக்கம் ...சந்திர கலாதர் .
&&&&
[ என் போக்கில் அதுவே சிறு கவிதை வடிவாய்...]
&
அன்பே !
இனிமை விலங்கு அவிழ்,
என்னை விடுதலை செய் ;
இனியும் வேண்டாம்
உன் முத்த மதுரசம்தான்;
நறுமணப் புகைத்திரளில்
இதயம் திணருதடி;
கதவு திறந்து
காலை ஒளி காட்டு ;
உன் தழுவல் பிடிப்புகளில்
எனையே இழந்துவிட்டேன்;
உன் மாயம் விடுவித்து
ஆண்மை திருப்பி விடு ;
அது தன்வய இதயமதை
உனக்கே பரிசாக்கும் .
---சந்திர கலாதர்
&
the gardener--[ 48 ]
free me from the bonds of your sweetness , my love !
no more of this wine of kisses .
this mist of heavy incense stifles my heart .
open the doors , make room for the morning light.
i am lost in you, wrapped in the fold of your caresses .
free me from your spells , and give me back the manhood to offer you my freed heart.
---rabindranath tagore.


No comments:
Post a Comment