கீதாஞ்சலி --[ 73 ]
ரபீந்தரநாத் தாகூர்
&
உலக வாழ்வினை ஒதுக்கி முக்தி பெறுதல் எனக்கு ஏற்புடையதல்ல .
ஆனந்தத்தின் ஆயிரம் தளைகளில் விடுதலை உணர்வின் தழுவலை நான் உணர்கிறேன் .
எனது இந்த மண் பாண்டத்தில் , எனக்கெனவே பற்பல வண்ணங்கள் , நறுமணங்கள் கொண்ட உனது புதுப்புது மதுரசக் கலயங்களால் எப்பொழுதும் நீ ஊற்றி நிரப்புகிறாய் .
எனது உலகம் அதன் நூறு விதவிதமான விளக்குகளை உனது தீபச் சுடரால் ஏற்றி , உனது ஆலய கருவறையின் முன் படைக்கும் .
முடியாது ..எனது ஐம்புலன்களின் கதவுகளை நான் ஒருபோதும் அடைக்கமாட்டேன்.
பார்த்தல் ,கேட்டல் ,தொடுதல் இவற்றின்வழி ஆனந்தங்கள் உனது மகிழ்ச்சியை அல்லவா தாங்கி வருகின்றன .
ஆம் ..எனது அனைத்து மாயைகளும் மகிழ்வின் ஒளிப்பெருக்காக எரியும் ;
எனது அனைத்து ஆசைகளும் அன்பின் பழங்களாகக் கனியும் .
------------------------------------
------தமிழ் ஆக்கம்
---சந்திர கலாதர்
-----------------------------------
gitanjali--[ 73 ]
&
deliverance is not for me in renunciation .
i feel the embrace of freedom in a thousand bonds of delight .
thou ever pourest for me the fresh draught of thy wine of various colours and fragrance,filling this earthern vessel to the brim .
my world will light its hundred different lamps with thy flame and place them before the altar of thy temple.
no, i will never shut the doors of my senses.
the delights of sight and hearing and touch will bear thy delight.
yes, all my illusions will burn into illumination of joy, and all my desires ripen into fruits of love.
---rabindranath tagore .
[கவிதை வடிவில் அதுவே ]
[ சந்திர கலாதர் ]
&
துறவறத்தில் முக்தி எனக்கல்ல ;
ஆனந்தத்தின் ஆயிரம் தளைகள்
என்னில் விடுதலைத் தழுவல்கள் .
புத்தம்புது மது ரசங்கள் எனக்காக
பற்பல நிறங்கள் வண்ணங்களில்
என் மட்பாண்டத்தில் வழிய வழிய
எப்பொழுதும் நீ ஊற்றுகிறாய் .
உன் சுடர்கொண்டு என்னுலகம்
நூறுவகை தீபங்கள் தூண்டி
உன் ஆலய வாயிலை அலங்கரிக்கும் .
புலன்களை ஒருபோதும் அடையேன்;
அவை முகிழ்க்கும் இன்பங்கள்
உன் ஆனந்தம் சுமப்பதல்லவோ !
ஆம் ...என் மாயைகள் எல்லாம்
மகிழ்ச்சி ரூபங்களாய் எரியும் ;
அனைத்து ஆசைகளோ
அன்புப் பழங்களாய்க் கனியும்



No comments:
Post a Comment