பாதம் பணிகிறேன்
கவி தாகூர் தன் புகழ் பெற்ற கவிதை வாழ்வு ஓய்வுகொண்டு அன்னாரது ஆன்மா அவரது மானுட உடலை விட்டு விடை பெறுவதற்கு சிலகாலம் முன்பு 'ப்ரணாம்' என்ற தலைப்பில் தன் கவிதை முயற்சிகளை எல்லாம் நடுநிலை உணர்வோடு நோக்கி அவை பற்றிய தன் எண்ணங்களை இச் சிறு கவிதையில் எடுத்துரைக்கிறார் .
ஆழ்ந்து படித்தால்தான் இது புரியும் .
' எல்லாம் கடந்தவனி' டம் ஒரு கவிஞன் தன் தோல்வியை ,அவனது ' மாறிய வண்ணமே இருக்கும்' லீலைகளை புரிந்துகொள்ள இயலா நிலையை ஒப்புக் கொள்கிறான் .
பணிவுடன் சமர்பிக்கிறேன்
&
ஒரு விளக்கத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை ;
பாதையோரமிருந்து ' மாறியவண்ணமே இருக்கும் ஒன்றின் ' பல்வண்ணம் கொண்ட இசைவிளையாடும் இப்புல்லாங்குழலை எப்போது கண்டெடுத்தேன் என்றும் எனக்குத் தெரியாது.
அந்தப் புலர்காலையில் நலிந்த இரவின் இருளும் ஒளியும்...
இரண்டுமே சிவந்த முகத்திரையின் நிழலில் ,
தத்தம் பசுமையான கூடலின் சிலிர்ப்புகளைப் பகிர்ந்து கொண்டன .
அந்த அமைதியான பெருங்கடலில் காலையின் குரல்வெள்ளம்
நூறு நீரோட்டங்களாய் ஓய்வின்றிப் பாய்ந்து அதிர்வு அலைகளின் ஊஞ்சலை விளைவித்தன .
எல்லையற்ற கடல்களைக் கடந்து
எண்ணிறந்த வழிப்போக்கர்கள்
எண்ணிலாப் பாதைகள் வழிநடந்து
மேகத் தலையணிகள் கொண்டிலங்கும்
கடக்கவொண்ணா மலைகளின் அரிய செல்வங்கள் நாடிச் சென்றனர் .
எனது பகல் இரவுகள் மட்டுமே ...
எனது மனம் மீறிய அலைதல்கள் மட்டுமே பொருளற்றுப் போயின .
எனது திரிதல் எல்லாமே
அந்த' எல்லை கடந்த ஒன்றின் ' தொடுகை நிகழ்வுக்கே அன்றி
அதைவிடவும் மேம்பட்ட எதனையும் என்னால் அடைய இயலாது --.
அதற்காகவே அந்த ' அடையமுடியாத ஒன்றின் 'காலடிகளின் நிழலாகி இருக்கிறேன் .
எனது புல்லாங்குழலுள் என் வாழ்வின் மூச்சினை மட்டுமே நான் செலுத்தினேன் .
எனது முயற்சி எல்லாம் அந்த ' மாறியவண்ணமே இருக்கும் ஒன்றின் ' இசைவடிவங்களை
எனது யாழின் நரம்புகளில் பதிவு செய்தற்பொருட்டே ஆகும் .
வசந்த காலத்தில் , மொட்டவிழ் பருவத்தில் ,
மரங்களின் இதயத்தின் வலிகளின் துடிப்புகளை
எனது வயப்படுத்தும் இசைக்குள் பேராவலுடன்
சிறு நடுக்குறும் ஒலி மாற்றங்களுடன் நான் அழைத்துவந்தேன் .
சிதைந்த இலைகள் பிரிவுப் பெருமூச்சுக்களை என் இசையில் விட்டுச் சென்றன.
இப்புவியின் உள்மடிப்புகளில் சூரியக்கிரணங்கள் இறங்குகையில் ,
புற்கள்,இளம் தளிர்கள் ஆகியவற்றின் மீது ,ஒரு சாம்பல் நிறத் திரையால் மறைக்கப்பட்டு ,
நெடிய தொலைவுகளுக்கு ஒரு அமைதியான வரவேற்பு இசை விரிகிறது .
அதனை இந்த வேய்ங்குழலின் துளைகள் வழி நான் பரவச் செய்கிறேன் .
எந்தப் பரந்த அளவிறந்த ஞானத்தேடல்
இரவின் விரல்களைச் சுற்றி ,
ஒளியின் புகழ் தோத்திரங்களை அவள் உச்சரித்தபடி ,
ருத்திராக்ஷ மாலையை அமைதியாய் அவளை உருட்டச் செய்கிறதோ ,
அதனை எல்லாம் ,
என் நெஞ்சின் மீது எனது புல்லாங்குழலை வைத்தபடி
எனது இதயத் துடிப்புகளில் இருந்து வடிவமைத்திருக்கிறேன் .
இளமொட்டுகளுள் சிறையுண்டு மறைந்திருந்து
கனவு உலகங்களில் வழிபாட்டிற்காக நிவேதனப் பொருட்கள் வைத்திருக்கும் பேழைகளைத் தேடும் நறுமணங்கள் -
இவற்றின் தயக்கமான உணர்வுகளை எனது இனிமையான புல்லாங்குழல்
தனது ராகங்களில் சேர்த்து வைத்திருக்கிறது .
உள்ளுணர்வுப் பெருங்கடலின் கலக்கமுற்ற அலைகளின் மிருதங்க இடி முழக்க உருளல்களிடை நடராஜன் நடமிடுகிறான் .
எதிரொலிக்கும் ஆர்ப்பரிப்புச் சிரிப்புடன் கூட
ஆழம் காணவொண்ணாக் கண்ணீரின் சிறுபிள்ளைத்தனமும் கலந்து
ஆரவாரக் ' கணீர் ' ஓசையை உயர்த்துகிறது.
அந்தத் தூளியில் , ஒளியும் நிழலும் களைப்பில்லா உல்லாசத்துடன் ஊஞ்சல் ஆடுகின்றன.
அக்கடற்கரை அமர்ந்து,
அந்தத் தாளங்கள் பின் தொடர்ந்து ,
என் கீதங்களை நான் உருவாக்கினேன் .
எனது லயங்களின் பின் மறைந்து
அந்த ' எல்லை கடந்த ஒன்றின் ' மகிழ்ச்சிகளையும் ஆவல்களையும்
நான் சிறுபார்வை கொண்டேன் .
நான் எனது இசைக்காக முயலுகையில்
அனைவரது உணர்வுகளின் எண்ணிலா முறையீடுகளும் குவிந்தன .
ஓ..மனிதர்களே !
எனது இசைவாழ்வின் இந்த முற்றுப்புள்ளியில் ,
உங்களது அறையில் ,நாள் முடிவில் ,
இரவின் அமைதியின் விளிம்பில் ,
தீப ஆராதனைக்கான அந்திவேளையில்
உங்கள்முன் நிற்கிறேன் .
அந்த ' உன்னத ' த்தின் பாதங்களில்
' மாறிய வண்ணமே இருக்கும் ஒன்றின் '
இசைவிளையாடும் இந்த வேய்ங்குழலைச் சமர்ப்பிக்கிறேன் ;
இங்கேதான் எனது இறுதி வணக்கம் ஓய்வு கொள்கிறது.
----ரபீந்தரநாத் தாகூர்
[ தமிழாக்கம் --சந்திர கலாதர் ]
&
pranaam
[obeisance]
i did not realise any meaning .
i knew not when i picked up the playful varicoloured flute of the 'everchanging one' from the wayside.
in that dawn of the light and darkness of the twilight,two of them shared the thrill from each other at their nascent union under the shade of a crimson veil.
in the great silent ocean the flood of voices of the morning ,flowed restless in a hundred currents and raised a swing of ripples.
numberless wayfarers wended by numerous paths in quest of rare wealth on cloud-capped impassable hills,crossing the boundless seas.
only my days and nights ,only my unmindful wanderings became meaningles'
my ramble was for the touch of the ' profound one ' , anything more than that i could not lay by-
i have shadowed steps of the ' unattainable one '.
only i blew the breath of life inside my flute,my endeavour was for recording the tunes of the ' everchanging one ' on the strings of my lyre.
o he eve of flowering the throbbing agony that arises in the heart of the tree in the spring i invoked by my enchanting music in eager tremulous modulations.
in my music , torn leaves have left behind their parting sigh .
in the inner fold of the earth when the sun-rays descend ,on the grasses and shoots a silent music of welcome spreads over long distance hidden by a grey screen ;that i broadcast from the apertures of this flute.
the spacious and profound realisation that makes the beads of 'aksha '- garland silently revolve round the fingers of night while she intones the hyms of light, placing my flute on my breast, i have got all by myself in the pulsation of my heart ;
the captive hidden fragrance ,resting in the young bud searches out in the dream-heaven, the casket holding the offerings for worship;
its hesitant feelings my melodious flute has gathered in its tunes.
amidst the rumbles of ' mridanga ' of the ruffled waves of the ocean of consciousness 'nataraj' dances ;
with the resounding guffaw mixes playfulness of bottomless tears, raising an uproarious clang -
in that hammock swings the light and shade with untiring abandon.
seated on the shore , following that stern beat i composed songs and under cover of my rhythm i glimpsed joys and yearnings of the ' limitless one ' .
feelings of all had their umerous appeals while i was striving for my music.
o men , at this terminal of my life of music , in your chamber i have called at the day's end , on the brink of the silence of night at this even tide of lamp-offring
on the feet of the 'one ' i place the playful flte of he ' everchanging one '-
here rests my last obeisance.
-----rabindranath tagore.