Sunday, August 25, 2013

என் உரையாய் ---
விடுமுறைக்குப் பின் பணியகம் செல்லச் செயல் படுகிறான் ..மூட்டை முடிச்சுகள் தயாராகின்றன...கண்ணீருடன் உற்றார் விடை தர அவன் நாலு வயதுச் சிறு மகள் விடை தராது ,
'நான் உன்னைப் போக விடமாட்டேன் !'
என்று கூற அவனுள் சிந்தனை கிளர்கிறது .
வலுவிலா மழலையின் வலிமைக் குரல் அவனை அசைத்துப் பார்க்கிறது .
தாகூரின் அற்புதக் கவிதை விரிகிறது .
நம்மை அழ வைக்கிறது .
ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு நாளும் இதனை எதிர்கொள்பவர்தானே !
நெடிய கவிதைதான் ...என் தமிழ் செதுக்கம் ஆங்கில மொழிமாற்றத்தில் இருந்து ....
படியுங்கள் ..சொல்லுங்கள் எண்ணங்களை .
அன்புடன் ...சந்திர கலாதர் /25.08.2013 /ஞாயிறு /ஆவணி 9 /பிற்பகல் 3.30 மணி   
 
&
நான் உன்னைப் போகவிட மாட்டேன் !
[ 1 ]
வாயிலில் வண்டி காத்திருக்கிறது .
இப்போது நண்பகல் .
இலையுதிர் காலக் கதிரோன் தன் கடுமை கூட்டியபடியே இருக்கிறான் .
நண்பகல் திடீர் காற்று வெறிச்சோடிய சிற்றூர்ப் பாதையில் புழுதி தூற்றுகிறது  
ஆலமரத்தின் குளிர் நிழலில் ஒரு பிச்சைக் கிழவி உடல் அயர்வில் 
தூங்குதற்குத் தன் கந்தைகளை விரித்திருக்கிறாள் .
பேச்சோ ,ஒலியோ ,உயிரின் அசைவுகளோ எங்கும் இல்லாது அது ஒரு இரவில் சூரிய  வெள்ளம் புகுந்ததுபோல் இருக்கிறது .
என்னுடைய வீட்டில் மட்டும்தான் ஓய்வோ தூக்கமோ இல்லாதிருக்கிறது .
 [ 2.]
' அஷ்வின் 'முடிந்து என் இலையுதிர்கால விடுமுறையும் முடிந்து விடுகிறது ..
மறுபடியும் நான் தொலைதேசப் பணியகம்  சென்றாக வேண்டும் 
கயிறுகளும் பிரிகளும் கையேந்தி , ஒருவரை ஒருவர் அழைத்தபடி, பல மூட்டைகள் கட்டியபடி வேலையாட்கள் இங்கும் அங்குமாய்ப் பறந்துகொண்டிருக்கிறார்கள்.
துயர்  நெஞ்சிற் தாங்கி நீர்த்திரை விழிகளில் இறக்கி ,  தனித்து  அழுவதற்குக்கூட நேரமின்றி இருக்கிறாள் என் மனைவி .
என் எல்லாத் தேவைகளும் நிறைவடைந்திருக்கின்றனவா என்று உறுதி செய்வதில் செயல் முனைப்புடன் இருக்கிறாள் .        
என் பொதிகள் எத்தனை பெருத்தாலும் அவளுக்கு நிறைவே இல்லை .
மன அயர்வில் அவளைக் கேட்கிறேன் :--:
'உன் நோக்கம்தான் என்ன ?
இத்தனை ஜாடிகள் ,பானைகள் ,தட்டுகள் , குடுவைகள் ,படுக்கைகள் ,பெட்டிகள் என்று ராஜ உடைமைகள் போன்ற இவற்றை வைத்து நான் என்ன செய்யக் கூடும் ?
சிலவற்றை எடுத்துச் செல்கிறேன் ;மீதியை இங்கேயே விட்டுச் செல்கிறேனே  '
[ 3 ]
என் சொல்லைச் சீந்துவார் இல்லை.
' யாருக்குத் தெரியும் ? திடீரென புரியாத தேசத்துல இதெல்லாம் தேவை என்றால் , எங்கே போய்த் தேடுவீர்கள் ?
தங்கமாய்ப் பருப்புகள் ,மிக நேர்த்தியான அரிசி , பாக்கு ,வெற்றிலை அதோ அங்கே ....;
கொஞ்சம் வெல்லக் கட்டிகள் அந்த மூடிய கிண்ணத்தில் .
இங்கே கொஞ்சம் தேங்காய்கள் ,இரண்டு ஜாடியிலே கடுகு எண்ணெய் ,மாம்பழக் கட்டி ,மாங்காய் வற்றல் ,இரண்டு லிட்டர் பால் ,மருந்து பாட்டில்கள் 
அங்கே கொஞ்சம் இனிப்புகள் ...
போகிற வழியில் இனிப்புகளைச் சாப்பிட மறக்காதீர்கள் '
காரண காரிய வாதங்கள் எல்லாம் வீண் என்று எனக்குத் தெரியும்      
ஒரு மலைபோலவே என் சுமை குவிந்து போனது .
நேரம் பார்க்கிறேன் ;
பேரன்பு உள்ளங்களை எல்லாம் பார்க்கிறேன் 
' நான் சென்றாக வேண்டும் ' என்று மெதுவாகச் சொல்கிறேன் 
மனையாள்  தன் முகம் திருப்புகிறாள் . 
தன் தாழ்த்திய விழிகளில் மிரண்டு நிற்கும் கண்ணீர்த் துளிகள்  என்னைத் துன்புறுத்தும் என்றெண்ணி , முகத்திரை இறக்கி மறைக்கிறாள் .
[ 4 ] 
கதவருகில் என் நாலு வயது மகள் சூழல் மறந்து அமர்ந்திருக்கிறாள்.
பிற நாட்களில் ,இந்நேரம் குளித்து அரை குறையாய்ச் சாப்பிட்டு தூங்கப் போயிருப்பாள் 
இன்று அவள் அம்மாவால் அவளைக் கவனிக்க முடியவில்லை .
நேரம் கடந்துவிட்டபோதிலும் குழந்தையைக் குளிப்பாட்டவோ உணவளிக்கவோ இல்லை .
இவ்வளவு நேரம் என் மகள் என் நிழலாய் , கவனமான அமைதியுடன் என் நடவடிக்கை எல்லாம் கண்காணித்து வந்தாள்
இப்பொழுது களைப்புற்று அமைதியாய் கதவருகில் அமர்ந்திருக்கிறாள் 
அவள் மனதில் என்ன ஓடுகிறது என்று எவர்க்கும் தெரியாது .
அவளிடம் பேசுகிறேன் :
' என் சின்னம்மா ..போயிட்டு வரேன்ம்மா .'
இறுகிய  முகமும் சோக விழிகளும் கொண்டு சொல்கிறாள்  :--
 
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ! '
 
வாயிற்படியில் தான் இன்னமும் அமர்ந்திருக்கிறாள் ;
என்னைக் கட்டிப் பிடிக்கவோ , கதவை அடைக்கவோ முயற்சிக்கவில்லை .
பாசத்தின் வலிமை கொண்டுமட்டும் அவள் சொல்கிறாள்  --
:
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ! '
 
அய்யோ ..செல்லும் நேரம் நெருங்கி விடுகிறது ;
அவளை நீங்கிச் செல்கிறேன் .   
[ 5 ] 
முட்டாள் பெண்ணே ..யார் நீ ?
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ..! '
இத்தனை உறுதியோடும் கர்வத்தோடும் இதைச் சொல்வதற்கு 
எங்கிருந்து வலிமை பெற்றாய் ?
இப்பாய்ந்து செல்லும் உலகினில் உன் குட்டிக் கரங்களால் எவரைத்  தடுத்து நிறுத்த முடியும் ?
உன் வாயிற் கதவருகில்  களைப்புற்ற கரங்களுடன் அமர்ந்தபடி 
பாசத்தின் வலிமை மட்டுமே கொண்டு உலக சக்திகளுடன் போராடப் போகிறாயா ?
எங்கள் இதயம் துன்பம் நிறைந்து இருப்பினும் எங்களால் நலிந்த நம்பிக்கைமட்டுமே வெளியிட முடிகிறது :-- 
' நீங்கள் இருப்பதையே விரும்புகிறோம் !'.
ஆனால் எவரால் உன்போல் துணிவுடன்  ,
' நான் உன்னைப் போக விட மாட்டேன் !'
என்று சொல்லக்கூடும்  
பச்சிளம் குழந்தையின் இதழ்கள் பாசத்தின் ஆணையைப் பெருமிதமாய்ப் பிறப்பிக்கின்றன 
இவ்வுலகம் உன்னைப் பார்த்துச் சிரிக்கிறது  ;
என்னை உன்னிலிருந்து இழுத்துச் செல்கிறது  .
ஒரு சட்டமிட்ட சோகமான படம்போல் கதவடியில் தோற்ற விழிகளுடன் நீ அமர்ந்திருக்கிறாய்  .
உன்னைப் பார்க்கிறேன்  ;
கண்ணீர் ததும்பும் விழிகளுடன் அகல்கிறேன் . .
[ 6 ] 
என் வழி நான் செல்கிறேன்  .
சாலையின் இருமருங்கும் முதிர்கதிர்களுடன் கதிரொளி துய்த்துக்  கொண்டிருக்கும் இலையுதிர்கால வயல்கள் காண்கிறேன் .
நாள்முழுதும் தம் நிழல்களையே நெடிது வெறித்தபடி சாலையில் மர வரிசைகள் தனிமைத் துயருற்று நிற்கின்றன . .
இலையுதிர்காலத்து வெள்ளம் கங்கையில் கடல் நோக்கிப் பெருக்கெடுத்து ஓடுகிறது  
தாய்ப்பால் அருந்தி உறங்கும் ஈன்றெடுத்த கன்றுகள் போல் மேகத்துணுக்குகள் நீலவானில் படுத்திருக்கின்றன .
யுகங்கள் முதிர்ந்த இவ்வுலகம் தொலைத்தொடுவான் வரை சூரியப் பிழம்பினில் வெற்றுடம்பாய்க் கிடக்கின்றன . .
உலகின் களைத்த நெடுமேனி காண்கிறேன் ;
இதய ஆழத்திலிருந்து நெட்டுயிர்ப்பு விடுக்கிறேன்  .    
[ 7 ]   
வானிலும் பூமியிலும் ஏன் இத்தனை கரிய சோகச் சிந்தனைகள் ! .
எத்தொலைவு சென்றிடினும் ஒரே ஒரு சோர்வூட்டும் புலம்பலே  கேட்கிறேன் ;
ஒரே ஒரு துயரப் பல்லவியே செவி மடுக்கிறேன்
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ..! '
புவியின் ஒரு விளிம்பிலிருந்து தொலைத்தொடுவான்வரை  எங்கும் இந்த முடிவிலா அழுகையின் எதிர் ஒலிப்பே :-
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ..! '
ஒரு எளிய புல் செண்டுதான் 
ஆனாலும்  அன்னை பூமியோ அதை நெஞ்சோடு சேர்த்து இறுகத் தழுவிக்  கொண்டு அழுகிறது :
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ...! '
அணையும் விளக்கின் நடுங்கும் சுடர் ;
இருள் அதை விழுங்கும் முன் ,  ஒரு புலம்பல் சுற்றிப் பரிதவிக்கிறது 
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ..! '
விண்ணின் மண்ணின் எல்லையிலா விரிவுகள் ஊடோடி
பழமையான அழுகை ,ஆழ்ந்த ஓலம் இதுவேதான் :--
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ..! '
இருப்பினும் எல்லாம் போகின்றன ;
நாம் அவற்றைப் போக அனுமதித்தாக வேண்டும் !
காலஓட்டம்  முதல் இதுவே விதி .   
படைப்பின் பிரவாகம் அழிவின் கடல் நோக்கியே பாய்கின்றது  .
நாம் ஆசைக் கரங்களை எட்ட விரிக்கிறோம் 
நம் விழிகள் நம்பிக்கை ஒளிர்க்கின்றன .
நாம் அறைகூவுகிறோம் :--
' நான் உன்னை விட மாட்டேன் ..! '
இருப்பினும் தடையிலா வெள்ளத்தில் எல்லாம் இழுத்துச் செல்லப்படுகின்றன .
சோகப் புலம்பலால் காலக் கரையை வீணே நாம் நிரப்புகிறோம்.
முன் அலை நோக்கிப் பின்அலை அரற்றுகிறது :--
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ..!'
அழைப்பைக் கேட்பாரோ பொருட்படுத்துவாரோ யாரும் இல்லை .
[ 8 ]
என் சிறு மகளின் வார்த்தைகளில் இப்பிரபஞ்சத்தின் இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் சோகப் புலம்பலின் குரல் கேட்கிறேன் .  .
நிற்காத  ராகங்களில் நியாயமற்ற இதே கோரிக்கை எல்லா முனைகளில் இருந்தும் எழுகிறது     
இப்பூமி தான் பெறுவதை எல்லாம் இழக்கிறாள்  ;
ஆனால் ,என் நாலுவயது மகள்போல் , தன் பிடி மட்டும்  விடாது  பாசத்தின் மமதையில் சூளுரைக்கிறாள்  :
' நான் உன்னைப் போக விட மாட்டேன்..! '
ஒவ்வொரு நாளும் நொடியும் இப்புவியின் நம்பிக்கைகள் முரட்டுத்தனமாய் 
சிதறடிக்கப் படுகின்றன 
அவள் முகம் வெளிருகிறது ; விழிகள் கண்ணீரால் மங்குகின்றன ;
இருப்பினும் பாசம் தோல்வி காண்பதில்லை 
நெஞ்சு நிமிர்த்தி அடங்காக் குரல் எழுப்புகிறாள்  :
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ..! '
ஒவ்வொரு முறை தோல்வியை எதிர்கொள்ளும்போதும் பூமி சொல்கிறாள் :' நான் நேசிக்கும் அவன் எப்படி எனை நீங்கிப் போகலாம் ?
என் ஆசையை விடவும் வலிமையானதும் எல்லையற்றதும் எது இருக்கக் கூடும் ? '
பாசம் உள்வலிமையின் அகந்தையில் பறைசாற்றுகிறது ;
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ..! '
ஆனால் அந்தோ  ! சோம்பேறிக் காற்றால் இறைக்கப்படும் உலர்தூசுபோல்
கால ஓட்டத்தில் தன் பாசமலர்கள் பற்றிச் செல்லப் படுவது காண்கிறாள் 
அவள் கண்கள் குளமாகின்றன ; இதயம் நொறுங்குகிறது ;
பொடிப்பொடியாய் உதிர்கிறாள் 
இருப்பினும் மாறாது உரைக்கிறாள் :
' கடவுள் தன் வாய்மை வழுவ மாட்டான் ;
பாசத்திற்கு அழிவிலாத் தலைமை எனும் உறுதி தந்திருக்கிறான் ! '    
பாசம் தன் மென்கருணை கொண்டு தைரியமாய் எதிர் கொள்கிறது 
தன்னை நசுக்கிவிடும் வல்லமை துணிகிறது 
மரணம் எனும் உண்மையைக் கூட மறுக்கிறது .
பாசத்தின் மமதை மொழிகள் மரணத்தைச் சிரிக்கச் செய்கின்றன .
அவள் மரணம் வீழ்கிறாள்  ; இருப்பினும் நிரந்தரமாய் வாழ்கிறாள் .
துயர்கொண்ட விழிகளின் கண்ணீர்த் திரை அதிர்வுபோல் , கவலையுடனான அச்சத்துடன் அவள் நடுங்கினாலும் கூட இப்பிரபஞ்சத்தின் அகன்விரிவுகளில் ஊடுருவி இருக்கிறாள் 
இதயம் நம்பிக்கை இழப்பினை எதிர்த்துப் போராடுகிறது 
இவ்வுலகின் மீது ஒரு துயரப் போர்வை விரிக்கிறது 
என்னுள் நோக்கிப் பார்க்கிறேன் :-- 
இந்த நோவுற்ற ஊமை பூமியை இரு அறிவிலாக் கரங்கள் வீண் தழுவலில் இறுக்கிக் கொண்டிருக்கின்றன 
ஒரு நிலையான நிழல் , நகரும் நீர் மீது சிந்தனை விதைக்கின்றது .
அது கண்ணீர் ததும்பும் ஒரு மேகத்தின் நிழலாகுமோ ?
[ 9 ]
மரங்களின் சலசலப்பில் ஏங்கும் ஓர் குரல் கேட்கிறேன் 
சருகு இலைகளுடன் நண்பகல் வெங்காற்று அக்கறையற்ற சோம்பேறித் தனத்துடன் விளையாடுகிறது 
மெல்லப்  பகல் தேய்கிறது ; நிழல்கள் 'அச்வதா ' மரத்தடியில் நீள்கிறது.
அந்த ' எல்லையிலான் 'உலகின் சமவெளி ஊடாய் ஒரு சோக எளிய  குழல் ஊதுகிறான்  
இவ்வுலகம் அதன் இசை கேட்கிறாள் 
தளர்ந்த கூந்தல் அவள் கழுத்தில் சரிய ,மஞ்சட் சூரியனில் சுடரிடும் தங்க மயமான துண்டினை தன் மார்பகங்கள் மீது விசிறியபடி , ஆற்றோர விரிவயல்வெளியில் அவள் அமர்ந்திருக்கிறாள் 
தொலைவில் அவள் பார்வை நிலைகொள்கிறது  
மொழியற்ற மௌனத்தில் அவள் குரல் ஊமைப்படுகிறது 
அவள் இறுக்கமான சோகம் பூசிய முகம் பார்க்கிறேன் 
அது கதவருகில் சிந்தனை வீழ்ந்த என் நாலு வயது மகள் முகம் போல் தோன்றுகிறது.
 
---ரபீந்தரநாத் தாகூர் .[ அக்டோபர் ,1892 ]
[ ஹுமாயூன் கபீர் அவர்களின் ஆங்கில மொழி மாற்றத்தில் இருந்து தமிழ் வடிவம் --சந்திர கலாதர் ],
&
' I WILL NOT LET YOU GO '
&
the carriage waits at the door. it is no midday .
the autumn sun is getting more and more intense .
midday gusts waft the dust across the deserted village path .
an old beggar woman has spread her rags in tired slumber
beneath the cool shade of the banyan tree .
on all sides stretches a sun-flooded night void of speech
or sound or sign of life .
ii
'aswin ' is over and my autumnal holidays are ended .
I must return to my distant place of work again .
busy servants flit about with cords and ropes ,
call one another from room to room and tie up many packs .
my wife with grief-laden heart and tear-dimmed eyes lacks leisure
even to weep alone .
she bustles about to make sure I have all I need .
however much the luggage grows , she is not content .
in despair I ask, ' what do you intend ?
what shall I do with all this wealth of a king's household,
with so many jugs and pots and plates and bottles and beds and boxes ?
let me leave behind some and take some with me .'
iii
no one pays attention to what I say .
' who knows--if suddenly you need them in an alien land
where will you find these things ?
pulses like gold and rice of the finest grain,
areca nuts and betel leaves are there .
some jiggery cakes I have put in that covered dish .
here are some coconuts , there two jugs of mustard oil ,
mango pancakes, mango dried and two seers of milk.
here are bottles full of medicine , and there some sweets .
swear that you won't forget to eat them on the way .'
I knew all argument or reason was in vain .
the luggage piled up like a very mountain .
I looked at the watch and looked at the dear dear face.
slowly I said, ' now I must go .'
she turned her face and pulled her scarf over lowered eyes
to hide her tears lest they do me harm .
iv
my four-year old daughter sat absent-minded by the door .
on other days she would , by now , have bathed
and gone off to sleep with scarce half-finished meal.
today her mother could not attend to her .
though it was late , she was neither bathed nor fed .
so long she had shadowed me and watched in attentive silence all I did .
now , with tired limbs she sat quietly by the door
and none knew what was in her mind .
I spoke to her , ' little mother mine , good bye '.
with sad eyes and solemn  face , she said ,
' I WILL NOT LET YOU GO .'
she kept on sitting where she was ,
she did not cling to me nor seek to block the door.
with love's assurance  she only said ,
'I WILL NOT LET YOU GO ',
but it was time to go and alas , I went .
v
who art thou ,my foolish girl ?
where didst thou find the strength to say words so bold and proud:
' I WILL NOT LET YOU GO .'
whom wilt thou hold in the fleeting world with thy tiny hands , proud maid ?
wilt thou sit with tired limbs by the homestead door
and fight the forces of the world with the force of love alone ?
our hearts are full of grief and yet all that we can say is expression of a timid hope ,
'we want that you should stay .'
who is there that dares say, ' I WILL NOT LET YOU GO '.
thy infant lips voiced the proud claim of love .
the world laughed at thee and dragged me off .
with defeated eyes thou sat by the door like a sad picture in a frame .
I looked at thee and left with tearful eyes .
vi
I went along my way .
on both sides of the road I saw the autumn fields weighed with corn
and basking in the sun .
the rows of trees stand desolate by the road
and all day long gaze at their own shadow .
the ganges flows to sea in full autumnal flood .
white strips of cloud lie upon the azure sky ,
like the new-born calves sleeping after a feed of mother's milk .
the age-old earth is bare in the bright sunlight and stretches to the far horizon .
I looked at her tired stretch and a deep sigh welled up from my heart.
vii
what sombre sadness broods over earth and sky .
far as I go , I hear one monotonous wail , one melancholy note :
' I WILL NOT LET YOU GO .'
from the earth's rim to the farthest horizon , there echoes the endless cry :
' I WILL NOT LET YOU GO .'
a mere wisp of grass , but mother earth clings to it , hugs it to heart and cries :
'I WILL NOT LET YOU GO .'
a flame flickers in the dying lamp.
before darkness can envelop it , there rings a cry ,
' I WILL NOT LET YOU GO .'
throughout heaven and earth's boundless stretch ,
it is the oldest cry , the deepest wail , '  I WILL NOT LET YOU GO .'
and yet all things go and we must let them go !.
this has been since the flow of time began.
creation's currents sweep to destruction's sea.
we stretch out eager arms , our eyes glow with hope ,we proclaim ,
' I WILL NOT LET YOU GO .'
and yet all are swept by the resistless flood .
in vain we fill the shores of time with sad lament .
the wave behind calls to the forward waves ,
'  I WILL NOT LET YOU  GO.'
' no one listens to the call and no one heads .
viii
I heard voiced the sad lamenting wail welling from the heart of the universe
in my little daughter's words .
from every side arose the same unreasoning claim in unceasing notes .
the earth ever loses what she gets but will not lose her hold , will ,
like my daughter four years old , declare in the pride of love ,
' I WILL NOT LET YOU GO.'
pale of face and eyes dim with tears every day and hour
her hopes are rudely blown and yet love will not know defeat ,
will still declare in defiant tones, ' I WILL NOT LET YOU GO .'
every time she tastes defeat she says ,
' how can he I love go away from me ?
what's there so strong or boundless as my desire ?'
love declares in pride of inner strength , ' I WILL NOT LET YOU GO .'
but alas ! like dry dust wafted by the idle breeze ,
love sees the beloved borne away by flow of time.
her eyes are washed with tears , with broken heart she crumbles down to earth ,
and still insists , ' god will not break his troth .
he has promised love eternal mastery .'
love with her slender grace boldly faces death ,
stands before his overpowering might and denies the very fact of death .
love's proud words make death laugh ,
but she suffers death and yet forever lives ,permeates the vastness of the universe
even while she trembles in anxious fear like a veil of tears on sad solemn eyes.
the heart keeps fighting against the loss of hope
and spreads a pall of sadness o'er the world .
ilook inward and I see;
 
two unreasoning arms that hold in vain embrace the dumb and painful earth .
a steady shadow broods over the moving waters .
is it the shadow of a cloud full of tears ?
ix
I hear a voice of yearning in the rattle of trees .
in idle indifference the warm midday wind plays with the dead dry leaves .
slowly the day wanes and the shadows lengthen beneath the ' aswatha ' tree.
the infinite plays a sad rustic pipe across the plains of the world .
the earth listens to the tune .
with loosened hair falling o'er her neck and a golden scarf that gleams
in the yellow sun flung across her   breasts , she sits in the vast fields of corn
by the riverside .
her steady eyes gaze at the distance .
her voice is mute with speechless silence .
I look at her sad solemn face and it is the face of my four-year old daughter
as she sat brooding by the door .
--RABINDRANATH TAGORE
October ,1892 [ jete nahi dibo from ' sonar taree '.
 

Friday, August 23, 2013

கல்யாணி 
&
கல்யாணி !
ஒரு மலர்வனத்தில் உள்ளடங்கி மறைந்து உன் குடில் 
நாள்முழுதும் உன் இல்ல வேலைகளில் முழு ஈடுபாட்டில் நீ  
வெளியே உன் மாமரத்தில் அமர்ந்திருக்கும் குயிலின் மென்னழைப்பு 
உள்ளே மாசிலா மகிழ்ச்சியில் உன் குழந்தையின் மழலைக் கீதம்-- 
எனது கடைசியும் மிகச் சிறந்ததுமான இறுதிப் பாடலை 
உனக்காகவே வைத்திருப்பேன் 
 
தன் வழிபாட்டு மலர்க் கூடையுடன் விடியல் 
உன் வாயில் அணுகுகிறது 
நாள் முடிவில் ,  வழிபாட்டிற்குத் தட்டில் 
தூண்டிய சுடர் விளக்குகள் ஏந்தி
உன் முன் மாலை தோன்றுகிறது 
நாள் முழுதும் ஓசையின்றி உன் இல்லத்தில் 
தெய்வீக இசை நிகழ்ந்துகொண்டு இருக்கிறது 
எனினும் உனது கைவளை கிணுகிணுப்பு சந்தம் ஒட்டி 
எனது கடைசியும் உன்னததுமான என் இறுதிப் பாடலை 
உனக்காகவே வைத்திருப்பேன் 
 
அழகிய பெண்கள் உன் பாதங்களில் புகழாரம் சூட்டுகின்றனர் 
அறிவுடைப் பெண்டிர் புகழ்மாலை உனக்கு அணிவிக்கின்றனர்
விண்ணொளி உன் நெற்றி ஒளிர்கின்றது
உன் விழிகளில் உன் இதய இனிமை பூக்கின்றது 
எனது கடைசியும் மிகச் சிறந்ததுமான இறுதிப் பாடலை 
உனக்காகவே வைத்திருப்பேன் 
 
வயது இளமை போன்றவற்றால் சிதைபடாது 
வேனில் பனிக்காலங்களிலும்கூட மாறுபாடின்றி இருக்கிறாய் 
எப்பருவமாயினும் பருவங்களின் அரசி நீ 
உன் விளக்குகள் அணைவதே இல்லை 
உன் மலர்கள் என்றும் புத்துணர்வுடன் மிளிர்கின்றன 
எங்கிருப்பினும் குன்றாத அருள் உனைச் சூழ்கிறது 
எனது கடைசியும் மிகச் சிறந்ததுமான இறுதிப் பாடலை 
உனக்காகவே வைத்திருப்பேன் .
 
ஒரு நாள் ஒரு சிற்றாறுபோல் மலைமுகட்டிலிருந்து 
பாய்ந்து குதித்தனை . 
இன்று ஒரு ஆழ்ந்த நதிபோல் உன் முழுமையில்
உல்லாச நடையுடன் கடல் நோக்கிப் பயணிக்கிறாய் 
உன் வழியில் இந்த இல்லத்தை 
உன் கரங்களில் தொட்டிலிட்டு உன் உயிர்நீரால் நீராட்டி
ஆசிகள் அருள முடிவு கொண்டனை 
எனது கடைசியும் மிகச் சிறந்ததுமான இறுதிப் பாடலை 
உனக்காகவே வைத்திருப்பேன் 
 
உன் வளமார்ந்த அமைதிப் பரிசு வழிப்போக்கர் பலரையும்
உன் இல்லம் திசை திருப்புகிறது 
உனது நேசக் கரங்கள் நைந்து கிழிந்த ஆன்மாக்களை
ஒட்டிட்டுத்  தைத்து முழுமை செய்கின்றன 
என் கவிதா குளிர் மலர் வனத்தில் பற்பல மொட்டுக்கள் 
காற்றின் கலக்கத்தில் பறிபட்டுப் போயிடினும்       .        
எனது கடைசியும் மிகச் சிறந்ததுவுமான இறுதிப் பாடலை 
உனக்காகவே வைத்திருப்பேன் .
 
-----ரபீந்தரநாத் தாகூர் 
[ தமிழ் செதுக்கம் மற்றுமோர் ஆங்கிலச் செதுக்கம் வழி --சந்திர கலாதர் ]
23.08.2013 /வெள்ளி / ஆவணி 7 /மாலை 5 மணி
&
KALYAANI
&
tucked away in a flower-garden is your cottage
o kalyani , and there you spend the livelong day busy with your homely chores .
outside , perched on your mango-tree the cuckoo bird calls tenderly
and , inside , your child warbles in sheer delight .
I shall keep for you the last and the best of my songs --my finale .
 
dawn comes to your doorstep with her basket of votive flowers.
at the end of the day , evening appears before you , platter in hand ,
with lamps lit for your worship .
all through the day sacred music plays about in your house without a sound
and yet keeping time with the tinkle of your bracelets
I shall keep for you the last and the best of my songs -- my finale.
 
women of beauty lay their tribute at your feet .
learned women lace their garlands of homage around your neck .
heavenly light shines on your brow and the sweetness of your heart
smiles through your eyes .
I shall keep for you the last and the best of my songs --my finale .
 
you remain the same summer or winter , unaffected by age or youth .
you are the queen of the seasons , whatever season it be .
your lamp does not go out ; your flowers are ever fresh .
perpetual grace surrounds you wherever you may be .
I shall keep for you the last and the best of my songs - my finale.
 
one day like a stream you had sallied forth down the crest of the hill .
you are like a deep river today , flowing freely towards the sea .
on your way you decided to cradle this one house in your arms
and bathe it with the benediction of your living waters .
I shall keep for you the last and the best of my songs --my finale .
 
the bounty of your peace beckons many a distracted wayfarer to your house .
torn and tattered souls are darned into wholeness here by your loving fingers.
and although in the flowery bower of my poesy ,
many a bud is nipped whenever the wind turns restless
I shall save the last and the best of my songs --my finale--for you
.
--RABINDRANATH TAGORE
[ translation by Kshitis Roy ] 

Tuesday, July 2, 2013

உங்களில் யார் எனை ஏற்பீர்கள் , ஓ என் நண்பர்களே !

உங்களில் யார் எனை ஏற்பீர்கள் , ஓ என் நண்பர்களே !
&
ஓ  என் நண்பர்களே !
என்னை உவந்து அளிக்க விழைகிறேன்
உங்களில் யார் எனை ஏற்பீர்கள் ?
உங்களில் எவர் எனைக் கனிய வைத்து,
என் கடமைகளை மறக்கச் செய்து
எல்லோருடனும் எனை அழைத்துச் செல்லத்
தகுதி செய்யும் வல்லார் உங்களில் எவர் ?
ஏதோ ஒரு அழகு முகமூடி நாடி
உலகின் நெடுஞ்சாலைகளில் நீங்கள் பயணிக்கையில்
என் சுமையின் அழுத்தத்தால்
பின்னேகித் தொடர வேண்டியதாகிறது
பொழுதெலாம் சிரிப்பும் குதூகலமுமாய் இருக்கும்
உங்களைப் பார்க்கையில்
நான் சுரத்தற்றுப் போகிறேன்

ஒ என் நண்பர்களே !
உங்களில் யார் எனை ஏற்பீர்கள் ?
விழி இமைக்கும் நேரத்துள் அனைத்தையும்
வாரிச் சுருட்டிக் கடலுள் வீசி எறியும்
காட்டாற்று வெள்ளம் போல்
என் எல்லாப் பந்தங்களையும் துணித்து
என் இதயச் சுமைகள் அனைத்தையும்
கதவருகில் குவியலாய் விடுத்து
என்னை இழுத்து ஓட முடிந்தவர்  யார் ?

உங்கள் அனைத்து வருகை செல்கை இடை
உரிமையோடு பெயர் சொல்லி அழைக்கக்கூடும்
என் இணை ஆன்மா நாடி நிற்கிறேன்
அத்தகையோர் சிறு பொழுது புன்னகையோடு
என் எதிர் நின்றிடின்
உங்களில் யார் எனை ஏற்பீர்கள் என்று
என்னால் கண்டுகொள்ள இயலும்
ஓ என் நண்பர்களே !
---ரபீந்தரநாத் தாகூர்
[ தமிழ் வடிவம் ]
--சந்திர கலாதர்
02.07.2013 / செவ்வாய் /இரவு 10 மணி
***************************
ah me ,my brothers ,
I wish to give myself away .
who amongst you would have me ,
who amongst you can mellow my heart ,
make me forget my tasks ,
so as to take me along with you all ?
you walk along the world's highways
bound for some mask of beauty
while I have to lag behind
borne down by my own burden .
I feel so listless
as I look at you --
laughing and making merry , all the time .
who amongst you would have me ,
ah me, my brothers ?
like some swift-moving flood
which sweeps everything to the sea
in the twinkle of an eye ,
tear asunder all my bonds ,
and run away with me ,
so that my heart's burden
lies all in a heap at the door .
amidst all your comings and goings
I look out for a kindred spirit
someone who can call me by my name .
if he should but stand smiling
before me for a while
I shall be able to make out
who amongst you would have me,
ah me , my brothers.
--translated poem of
Rabindranath tagore .
       
   

Saturday, June 29, 2013

இலையுதிர் காலையில் விழிக்கையில்
&
 
இலையுதிர் காலையில் விழிக்கையில்
இனம் புரியாத தவிப்பு தாக்குகிறது --
ஏன் என்று புரியவில்லை .
' ஷிபாலி ' மலர் குலுங்கும் கிளைதனில் பறவைகள்
ஒன்றை ஒன்று அழைத்துக் கொள்கின்றன
அவை என்ன பாடுகின்றன என்றும் தெரியவில்லை .
காற்று இத்தனை இதமாயும் மென்மையாகவும் இருக்கையில்
என் இதயம் ஏன் ஏங்க வேண்டும் ?
இல்லம் கசந்து , மாய மலர்கள் நாடி
நீலவானில் அலைந்திட விழையும் எண்ணமும் ஏன் ?
 
யாரோ ஒருவர் இந்த இலையுதிர் காலை காணவில்லை --
என் வாழ்க்கை அதனாற்தான் வெறுமையுற்றுத் தோன்றுகிறது .
இங்கும் அங்குமாய்ப் பார்த்த வண்ணம் இருக்கிறேன் --
அவளை எங்குமே காண இயலாததால்
இதயம் அழுகிறது .
அந்தோ , அவள் ஏதோ வெளிறிய நிழல் பின்னிய
கனவு தேசம்   போய்விட்டனளே !  
அங்கு அவள் ஏதோ மலர்ச் சோலையில்
நீண்ட குழல் அவிழ
என் பிரிவின் எழும் வலியில்  
விழிகள் கண்ணீர் நதிகளாக அமர்ந்திருக்கிறாளோ ?
என் துயரில் கவிதை வடித்தேன் எனில்
அதைப் பாடிக் காட்டுதற்கு எவரும் இல்லையே-- .
மலர் சேகரித்து மாலை தொடுத்தால்
அதை அளித்தற்கும் எவரும் இல்லையே-- .
என் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பிடினும்
எவர் பாதங்களில் விட்டேக முடியும் ?
இருப்பினும் அவள் பற்றிய அக்கறை இன்றி இருக்கிறேன்
என்று அவள் எண்ணி மனம் நைந்து விடலாகாதே        
என்று பொழுதும் அஞ்சி நிற்கிறேன் --
 
---ரபீந்தரநாத் தாகூர்
&
[ தமிழ் வடிவம் ]
--சந்திர கலாதர்
29.06.2013 / சனி / ஆனி 15 / விஜய / இரவு 9 மணி
&
as I awake this autumn morning,
a nameless longing assails me--
I know not why .
the birds on the bough of the flowering
' shephali ' call to each other.
I do not know
what song they sing .
when the wind is so balmy ,
so gentle,
why should my heart pine ?
why should I weary of home
and feel like wandering across
the blue of the sky,
looking for magic flowers ?
 
someone is missing
this autumn morning --
that is why my life appears empty .
I look here , I look there --
and my heart weeps because
she is nowhere to be seen .
she is gone , alas ,
to some pale and shadowy land of dreams ,
where she sits in some flowery glade--
her long tresses let down ,
and her eyes streaming with tears
for the pain of parting from me .
if I make songs out of my sorrow,
there is none to whom to sing them .
if I gather flowers and weave them into a garland ,
there is none to whom to offer it .
if I wish to give up this life,
where is the one at whose
feet I could lay it down ?
and yet , I have fear all the while
lest she feels hurt --
imagining that
I may not care for her .
 
---Rabindranath Tagore [1886 ]   
  

Friday, June 28, 2013

FRUIT-GATHERING  [ 11 ] 
&
it decks me to mock at me , this jewelled chain of mine.

it bruises me when on my neck , it strangles me when I struggle to tear it off.

it grips my throat , it chokes my singing .

could I but offer it to your hand , my lord , I would be saved .

take it from me , and in exchange bind me to you with a garland , for I am ashamed to stand before you with this jewelled chain on my neck .

--- RABINDRANATH TAGORE

கனி திரட்டுதல் --11
&
இந்த நவமணி மாலை ஏளனம் செய்வதற்கே என்னை அலங்கரிக்கிறது .

கழுத்தில் காயம் ஏற்படுத்துகிறது ;
துண்டித்து எறியப் போராடுகையில் என்னையே நெரிக்கிறது .

குரல்வளை இறுக்கி என் பாடலைத் திணறடிக்கிறது .

என் தலைவ !
இதனை உன் கரம் சேர்த்தால் மட்டுமே எனக்கு உய்வுண்டு  .

என்னிடமிருந்து எடுத்துக் கொள் ; மாற்றாக ஒரு மலர்மாலையால்
உன்னுடன் என்னைப் பிணைத்துக் கொள் -
ஏனெனில் இந்த நவரத்தின மாலை அணிந்து உன் எதிர் நிற்க வெட்கப் படுகிறேன்

--ரபீந்தரநாத் தாகூர்

[ தமிழ் வடிவம் ]

--சந்திர கலாதர்
28.06.2013 / வெள்ளி / ஆனி / விஜய / இரவு 8.30 மணி
அண்ணாநகர் /
சென்னை  

Thursday, June 27, 2013

CROSSING
[ 1 ]
&
the sun breaks out from the clouds on the day when I must go .
and the sky gazes upon the earth like god's wonder.
my heart is sad, for it knows not from where comes its call.
does the breeze bring the whisper of the world which I leave behind with its music of tears melting in the sunny silence ?
or the breath of the island in the faraway sea basking in the summer of the unknown flowers ?
--Rabindranath Tagore
&
பயணம்
[ 1 ]
நான் சென்றாக வேண்டிய நாள் ;
கதிரோன் மேகங்களைத் தகர்த்துத் தோன்றுகிறான் .

கடவுளின் விந்தையாய் மண்ணுலகம் இலங்குகிறது ;
வானுலகம் விழி வாங்காது அடர்ந்து அதைப் பார்க்கிறது .

தனக்கான அழைப்பு எங்கிருந்து எழுகிறது என இதயம் அறிய முடியவில்லை ;
அதனால் அது சோகம் சுமக்கிறது .

நான் நீங்கிடும் உலகின் கண்ணீரின் இசை ஒளிமயமான நிசப்தத்தில் கரைந்துகொண்டிருக்கிறது ;
இத் தென்றல் ,
அவ்வுலகின் மென்மொழியைச் சுமந்து சேர்க்கிறதோ ?
அல்லது ,
தொலைகடல் தீவு , இனம் தெரியா மலர்களின் வெம்மைச் சுகங்களில் இதம் தேடுகிறதே ,
அதன் மூச்சினைத் தாங்கி வருகிறதோ ?
---ரபீந்திரநாத் தாகூர்
[ சந்திர கலாதர் ]
தமிழ் வடிவம் / 27.06.2013 / வியாழன் / ஆனி 13 / இரவு 9.30 /விஜய ஆண்டு
     

Wednesday, November 28, 2012

CHITRA
 
RABINDRANATH TAGORE
 
SCENE 9
 
களம் 9
 
&
chitra and arjuna
chitra [ cloaked ]
சித்ரா --அர்ஜுனா
சித்ரா [ஆடை மறைப்புடன் ]
my lord , has the cup been drained to the last drop ?
is this , indeed , the end ?
no , when all is done something still remains ,
and that is my last sacrifice at your feet .
i brought from the garden of heaven flowers of incomparable beauty with which to worship you , god of my heart .
if the rites are over , if the flowers are faded ,
let me throw them out of the temple [ unveiling in her original male attire ].
now , look at your worshipper with gracious eyes .
i am not beautifully perfect as the flowers with which i worshipped .
i have many flaws and blemishes .
i am a traveller in the great world-path , my garments are dirty , and my feet are bleeding with thorns .
where should i achieve flower-beauty , the unsullied loveliness of a moment's life?
the gift that i proudly bring you is the heart of a woman .
here have all the pains and joys gathered ,
the hopes and fears and shames of a daughter of the dust ;
here love springs up struggling toward immortal life .
herein lies an imperfection which yet is noble and grand .
if the flower-service is finished , my master ,
accept this as your servant for the days to come !
i am chitra , the king's daughter .
perhaps you will remember the day
when a woman came to you in the temple of shiva,
her body loaded with ornaments and finery .
that shameless woman came to court you as though she were a man .
you did well . my lord ,
i am that woman .
she was my disguise .
then by the boon of gods
i  obtained for a year the most radiant form that a mortal ever wore ,
and wearied my hero's heart with the burden of that deceit .
most surely i am not that woman .
i am chitra . no goddess to be worshipped ,
nor yet the object of common pity to be brushed aside like a moth with indifference .
if you deign to keep me by your side in the path of danger and daring ,
if you allow me to share the great duties of your life ,
then you will know your true self .
if your babe , whom i am nourishing in my womb , be born a son ,
i shall myself teach him to be asecond arjuna ,
and send him to you when the time comes ,
and then at last you will truly know me .
to-day i can only offer you chitra ,
the daughter of a king .
என் மன்னா ,கடைசிச் சொட்டுவரை இக்கோப்பையில் இருந்து கவிழ்த்தாகிவிட்டதா ?
உண்மையில் இதுதான் முடிவா ?
அல்ல..எல்லாம் முடிந்தாலும் ஏதோ சற்று மீதமிருக்கும் ;
அதுதான் என் இறுதி தியாகம் உன் பாதங்களில்.
என் இதயக் கடவுளான உங்களை  வழிபடுதற்கு விண்ணகத் தோட்டத்தில் இருந்து  நிகரிலா அழகுடைய மலர்கள் சேகரித்து வந்தேன் .
சடங்குகள் முடிவு பெற்றிருந்தால் ,
மலர்கள் வாடிப் போயிருந்தால்
அவற்றை நான் கோயிலுக்கு வெளியே எறிந்துவிடுகிறேன் .
 
[தான் முன்பெல்லாம் அணிந்திருந்த ஆண் உடையுடன் வெளிப்படுகிறாள் ]
 
இப்போது கருணை விழிகளுடன் உங்கள்  பக்தையைப் பாருங்கள் .
நான் உங்களை  வழிபட்ட மலர்கள்போல் முழுமை அழகுள்ளவள் அல்ல.
நான் பல குறைகளும் களங்கங்களும் கொண்டவள் .
நான் இப்பேருலகப் பாதையில் ஒரு வழிப்போக்கள் ;
என் ஆடைகள் அழுக்கேறி என் பாதங்கள் முட்கீறல்களில் ரத்தக் கசிவாய் உள்ளன .
நான் எங்கு மலர்-அழகு பெறுவது ?
எங்கே அதன் ஒரு நொடி வாழ்வின் கரையிலாப் பொலிவு அடைவது ?
நான் பரிசாக உனக்கெனப் பெருமையுடன் கொணர்ந்திருப்பது
ஒரு பெண்ணின் இதயத்தைத்தான் .
இதனில் அனைத்து வலிகளும் ஆனந்தங்களும் ;
ஒரு மண்மகளின் நம்பிக்கைகள் ,அச்சங்கள் ,அவமானங்கள் எல்லாமும் ஒன்று திரட்டப்பட்டு நிற்கின்றன .
இங்கு அழிவிலா வாழ்வு நோக்கி உழன்று கொண்டிருக்கும் காதல் ஊற்றெடுக்கிறது .
இதற்குள் குறைபாடு பொதிந்திருக்கிறது ;
ஆயினும் அது கண்ணியமானதும் கம்பீரமானதுமாயும் இருக்கிறது .
மலர் வழிபாடு முடிந்திருப்பின் ,என் தலைவ ,
எதிர் வரும் நாட்களுக்கெ
 உனது பணியாளாய்
இதனை ஏற்றிடுவாய் .
 
நான் சித்ரா ,
அரசனின் மகள் .
தன மேனி அணிகளாலும் பகட்டு ஆடைகளாலும் கனக்க 
அந்த சிவன் கோயிலுக்கு உன்னிடம் ஒருநாள் ஒரு பெண் வந்தாளே 
அது ஒருவேளை உன் நினைவில் இருக்கலாம் .
தான் ஒரு ஆண்மகன்போல் உன்னோடு சரசமாட வெட்கம் கெட்டு வந்தாளே ...
நீ அவளை ஏற்கவில்லை .
நீ சரியாகத்தான் செய்தாய் .
என் தலைவனே ,அவள்தான் நான் .
அவள்தான் என் வேடதாரி .
அப்போது தேவர்களின் வரத்தால்
ஓர் ஆண்டிற்கு ஒரு மானுடம் இதுகாறும் அணிந்ததிலேயே
 மிகமிகையான ஒளிரும் ஒரு வடிவத்தை நான் பெற்றிருந்தேன்
அந்தத் தந்திரச் சுமையால் என் வீரனின் இதயத்தை களைப்புறச் செய்தேன்.
 
நான்தான் சித்ரா .
வழிபடுதற்குக் கடவுள் அல்ல.;
இருப்பினும் ஒரு அற்பப் பூச்சிபோல் அசட்டையாய் விசிறித் தள்ள
கேவலப் பொருளும் அல்ல .
ஆபத்தும் அறைகூவல்களும் நிறைந்த உன் பாதையில்
உன்னருகே எனை வைத்துக்கொள்ள மனம் இறங்கினால்,
உனது வாழ்வின் பெருங்கடமைகளில் நானும் பங்கேற்க அனுமதித்தால் ,
பின் என் உண்மையான உட்பொருளை நீ அறிவாய் .
எனது கருவறையில் நான் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் உனது குழந்தை, அது மகனாகப் பிறப்பின்
அவனுக்கு நானே இரண்டாம் அர்ஜுனனாகக் கற்பித்து .,.
நேரம் கனியும் காலத்தில் உன்னிடம் அனுப்பி வைப்பேன்
அதன் பிறகு இறுதியாக நீ உண்மையிலேயே நான் யார் என்றறிவாய் .
இன்று சித்ராவாக,
ஒரு அரசனின் மகளாக
என்னை உனக்குப் படைக்கிறேன் .
arjuna --
beloved , my life is full .
அர்ஜுனா --
எனதன்பே !
என் வாழ்வு நிறைவாகிறது
 
தமிழாக்கம்
சந்திர கலாதர் 
28.11.2012 / புதன்  /கார்த்திகை 13 /இரவு 11 மணி