கல்யாணி
&
கல்யாணி !
ஒரு மலர்வனத்தில் உள்ளடங்கி மறைந்து உன் குடில்
நாள்முழுதும் உன் இல்ல வேலைகளில் முழு ஈடுபாட்டில் நீ
வெளியே உன் மாமரத்தில் அமர்ந்திருக்கு ம் குயிலின் மென்னழைப்பு
உள்ளே மாசிலா மகிழ்ச்சியில் உன் குழந்தையின் மழலைக் கீதம்--
எனது கடைசியும் மிகச் சிறந்ததுமான இறுதிப் பாடலை
உனக்காகவே வைத்திருப்பேன்
தன் வழிபாட்டு மலர்க் கூடையுடன் விடியல்
உன் வாயில் அணுகுகிறது
நாள் முடிவில் , வழிபாட்டிற்குத் தட்டில்
தூண்டிய சுடர் விளக்குகள் ஏந்தி
உன் முன் மாலை தோன்றுகிறது
நாள் முழுதும் ஓசையின்றி உன் இல்லத்தில்
தெய்வீக இசை நிகழ்ந்துகொண்டு இருக்கிறது
எனினும் உனது கைவளை கிணுகிணுப்பு சந்தம் ஒட்டி
எனது கடைசியும் உன்னததுமான என் இறுதிப் பாடலை
உனக்காகவே வைத்திருப்பேன்
அழகிய பெண்கள் உன் பாதங்களில் புகழாரம் சூட்டுகின்றனர்
அறிவுடைப் பெண்டிர் புகழ்மாலை உனக்கு அணிவிக்கின்றனர்
விண்ணொளி உன் நெற்றி ஒளிர்கின்றது
உன் விழிகளில் உன் இதய இனிமை பூக்கின்றது
எனது கடைசியும் மிகச் சிறந்ததுமான இறுதிப் பாடலை
உனக்காகவே வைத்திருப்பேன்
வயது இளமை போன்றவற்றால் சிதைபடாது
வேனில் பனிக்காலங்களிலும்கூட மாறுபாடின்றி இருக்கிறாய்
எப்பருவமாயினும் பருவங்களின் அரசி நீ
உன் விளக்குகள் அணைவதே இல்லை
உன் மலர்கள் என்றும் புத்துணர்வுடன் மிளிர்கின்றன
எங்கிருப்பினும் குன்றாத அருள் உனைச் சூழ்கிறது
எனது கடைசியும் மிகச் சிறந்ததுமான இறுதிப் பாடலை
உனக்காகவே வைத்திருப்பேன் .
ஒரு நாள் ஒரு சிற்றாறுபோல் மலைமுகட்டிலிருந் து
பாய்ந்து குதித்தனை .
இன்று ஒரு ஆழ்ந்த நதிபோல் உன் முழுமையில்
உல்லாச நடையுடன் கடல் நோக்கிப் பயணிக்கிறாய்
உன் வழியில் இந்த இல்லத்தை
உன் கரங்களில் தொட்டிலிட்டு உன் உயிர்நீரால் நீராட்டி
ஆசிகள் அருள முடிவு கொண்டனை
எனது கடைசியும் மிகச் சிறந்ததுமான இறுதிப் பாடலை
உனக்காகவே வைத்திருப்பேன்
உன் வளமார்ந்த அமைதிப் பரிசு வழிப்போக்கர் பலரையும்
உன் இல்லம் திசை திருப்புகிறது
உனது நேசக் கரங்கள் நைந்து கிழிந்த ஆன்மாக்களை
ஒட்டிட்டுத் தைத்து முழுமை செய்கின்றன
என் கவிதா குளிர் மலர் வனத்தில் பற்பல மொட்டுக்கள்
காற்றின் கலக்கத்தில் பறிபட்டுப் போயிடினும் .
எனது கடைசியும் மிகச் சிறந்ததுவுமான இறுதிப் பாடலை
எனது கடைசியும் மிகச் சிறந்ததுவுமான இறுதிப் பாடலை
உனக்காகவே வைத்திருப்பேன் .
-----ரபீந்தரநாத் தாகூர்
[ தமிழ் செதுக்கம் மற்றுமோர் ஆங்கிலச் செதுக்கம் வழி --சந்திர கலாதர் ]
23.08.2013 /வெள்ளி / ஆவணி 7 /மாலை 5 மணி
&
KALYAANI
&
tucked away in a flower-garden is your cottage
o kalyani , and there you spend the livelong day busy with your homely chores .
outside , perched on your mango-tree the cuckoo bird calls tenderly
and , inside , your child warbles in sheer delight .
I shall keep for you the last and the best of my songs --my finale .
dawn comes to your doorstep with her basket of votive flowers.
at the end of the day , evening appears before you , platter in hand ,
with lamps lit for your worship .
all through the day sacred music plays about in your house without a sound
and yet keeping time with the tinkle of your bracelets
I shall keep for you the last and the best of my songs -- my finale.
women of beauty lay their tribute at your feet .
learned women lace their garlands of homage around your neck .
heavenly light shines on your brow and the sweetness of your heart
smiles through your eyes .
I shall keep for you the last and the best of my songs --my finale .
you remain the same summer or winter , unaffected by age or youth .
you are the queen of the seasons , whatever season it be .
your lamp does not go out ; your flowers are ever fresh .
perpetual grace surrounds you wherever you may be .
I shall keep for you the last and the best of my songs - my finale.
one day like a stream you had sallied forth down the crest of the hill .
you are like a deep river today , flowing freely towards the sea .
on your way you decided to cradle this one house in your arms
and bathe it with the benediction of your living waters .
I shall keep for you the last and the best of my songs --my finale .
the bounty of your peace beckons many a distracted wayfarer to your house .
torn and tattered souls are darned into wholeness here by your loving fingers.
and although in the flowery bower of my poesy ,
many a bud is nipped whenever the wind turns restless
I shall save the last and the best of my songs --my finale--for you
.
--RABINDRANATH TAGORE
[ translation by Kshitis Roy ]

No comments:
Post a Comment