இலையுதிர் காலையில் விழிக்கையில்
&
இலையுதிர் காலையில் விழிக்கையில்
இனம் புரியாத தவிப்பு தாக்குகிறது --
ஏன் என்று புரியவில்லை .
' ஷிபாலி ' மலர் குலுங்கும் கிளைதனில் பறவைகள்
ஒன்றை ஒன்று அழைத்துக் கொள்கின்றன
அவை என்ன பாடுகின்றன என்றும் தெரியவில்லை .
காற்று இத்தனை இதமாயும் மென்மையாகவும் இருக்கையில்
என் இதயம் ஏன் ஏங்க வேண்டும் ?
இல்லம் கசந்து , மாய மலர்கள் நாடி
நீலவானில் அலைந்திட விழையும் எண்ணமும் ஏன் ?
யாரோ ஒருவர் இந்த இலையுதிர் காலை காணவில்லை --
என் வாழ்க்கை அதனாற்தான் வெறுமையுற்றுத் தோன்றுகிறது .
இங்கும் அங்குமாய்ப் பார்த்த வண்ணம் இருக்கிறேன் --
அவளை எங்குமே காண இயலாததால்
இதயம் அழுகிறது .
அந்தோ , அவள் ஏதோ வெளிறிய நிழல் பின்னிய
கனவு தேசம் போய்விட்டனளே !
அங்கு அவள் ஏதோ மலர்ச் சோலையில்
நீண்ட குழல் அவிழ
என் பிரிவின் எழும் வலியில்
விழிகள் கண்ணீர் நதிகளாக அமர்ந்திருக்கிறாளோ ?
என் துயரில் கவிதை வடித்தேன் எனில்
அதைப் பாடிக் காட்டுதற்கு எவரும் இல்லையே-- .
மலர் சேகரித்து மாலை தொடுத்தால்
அதை அளித்தற்கும் எவரும் இல்லையே-- .
என் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பிடினும்
எவர் பாதங்களில் விட்டேக முடியும் ?
இருப்பினும் அவள் பற்றிய அக்கறை இன்றி இருக்கிறேன்
என்று அவள் எண்ணி மனம் நைந்து விடலாகாதே
என்று பொழுதும் அஞ்சி நிற்கிறேன் --
---ரபீந்தரநாத் தாகூர்
&
[ தமிழ் வடிவம் ]
--சந்திர கலாதர்
29.06.2013 / சனி / ஆனி 15 / விஜய / இரவு 9 மணி
&
as I awake this autumn morning,
a nameless longing assails me--
I know not why .
the birds on the bough of the flowering
' shephali ' call to each other.
I do not know
what song they sing .
when the wind is so balmy ,
so gentle,
why should my heart pine ?
why should I weary of home
and feel like wandering across
the blue of the sky,
looking for magic flowers ?
someone is missing
this autumn morning --
that is why my life appears empty .
I look here , I look there --
and my heart weeps because
she is nowhere to be seen .
she is gone , alas ,
to some pale and shadowy land of dreams ,
where she sits in some flowery glade--
her long tresses let down ,
and her eyes streaming with tears
for the pain of parting from me .
if I make songs out of my sorrow,
there is none to whom to sing them .
if I gather flowers and weave them into a garland ,
there is none to whom to offer it .
if I wish to give up this life,
where is the one at whose
feet I could lay it down ?
and yet , I have fear all the while
lest she feels hurt --
imagining that
I may not care for her .
---Rabindranath Tagore [1886 ]


