Sunday, November 27, 2011

அவள் கரங்களைத் தாங்கி

நெஞ்சோடு பதித்துக் கொள்கிறேன் ;

அவள் அழகால் என் கைகளை நிரப்பவும்

முத்தங்களால் இன்னகை கவர்ந்திடவும்

கண்களால் குறு கரும்பார்வை குடிக்கவும் முயல்கிறேன்--


ஹா ! ஆனால் அவை எங்கே ?

வானின் நீலத்தை வடித்தெடுக்க வல்லார் யார் ?


அழகைக் கவர முயல்கிறேன் ;

கரங்களில் உடலை மட்டும் விடுத்து

சாகசமாய்த் தப்புகிறது--


திகைப்பும் களைப்புமாய் பின்னேகுகிறேன்--


மனம் மட்டுமே தீண்டத்தகும் மலரை

உடல் எப்படித் தீண்டக் கூடும் ?


------ரபீந்தரநாத் தாகூர்

[தோட்டக்காரன் - 49 ]

[மொழி மாற்றம் ]

------சந்திர கலாதர்


i hold her hands and press her to my breast.


i try to fill my arms with her loveliness ,to plunder her sweet smile with kisses ,

to drink her dark glances with my eyes .


ah,but,where is it ? who can strain the blue from the skies ?


i try to grasp the beauty; it eludes me, leaving only the body in my hands .
 
 
 
baffled and weary i come back.
 
 
how can the body touch the flower which only the spirit may touch ?